senile dementia
முதுமை மறதி, முதுமை அறிவாற்றல் இழப்பு, முதுமை உளத் தளர்ச்சி
தமிழ் விளக்கம்
மறதிநோய் (Dementia என்பதற்குச் 'சிதைவடையும் மனம்' என்று பொருள். இது ஒரு தீவிரமான உளவியல் குறைபாடாகும். இது மூளையில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகவோ அல்லது நிலைத்து வளரக்கூடியதாகவோ இருக்கலாம். உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலிருந்து, அதிகரித்து, சற்று விரைவாக முதிர்வதால் ஏற்படலாம். முதுமை மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இதனை ஒத்த அறிகுறிகள் 'சேதன மூளை நோய்க் கூட்டறிகுறி' (Organic brain syndrome) அல்லது கோளாறு ஆகியவற்றாலும் விளையலாம். ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்குக் காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள். அல்சைமர்ஸ் நோய், மூளைக்கான குருதி வழங்கலில் பாதிப்பு, மூளைக் கட்டிகள், தலையில் ஏற்படும் விபத்துக்கள், மதுப்பழக்கம், ஹார்மோன் சுரத்தலில் குறைபாடு, விட்டமின் குறைபாடுகள் போன்றவை இந்நோயை அதிகரிக்கலாம். பொதுவான அறிகுறிகள்: தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல், ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும். வயது மறந்து போகும். சொற்கள் மறந்து போகும். புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலைச் சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும். நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும். அடிக்கடி கோபப்படல் பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள் தனிநல சுகாதாரப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கத் தவறுதல், புதியவற்றை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.
English
A syndrome of old age that is associated with deterioration of brain tissues, often leading to such symptoms as loss of memory, confusion, stubbornness, perceptual distortions, and thought disorders. It is a syndrome characterized by generalized irreversible disturbance of the higher cortical functions. Senile dementia is not a disease itself but a syndrome associated with several diseases. The most common types of senile dementia are Alzheimer's disease and multi-infarct dementia. Senile dementia is also referred to as senility, "senile psychosis", "primary degenerative dementia, senile onset", and organic mental disorder.