Senior Companion Program (SCP)
மூத்தோர் தோழமைத் திட்டம்
தமிழ் விளக்கம்
உடல் நலிவுற்ற, சுகவீனமான, விஷேசித்த தேவைகளைக் கொண்ட முதியவர்களுக்கு, அவர்கள் வயதையொட்டிய முதியவர்கள் மூலமாக உதவி செய்ய, தேசிய சமுதாய சேவை நிறுவனம் ஏற்படுத்திய மூத்தோர் தொண்டரணி. மூத்த தோழர்களென்று அழைக்கப்படும் இவர்கள், முதியோர் இல்லங்களில், தங்களது சொந்த வீடுகளில், அந்திமப் பராமரிப்பகங்களில் உள்ள பிற மூத்தோருக்கு ஆதரவும், உதவியும், அவர்களுடன் ஆறுதலாக நேரம் செலவிட்டும் உதவுகின்றனர்.
English
A Senior Corps program of the Corporation for National and Community Service in which people older than age 60 help other adults with special needs, particularly the frail elderly. Senior Companions provide support, assistance, and companionship to people in institutional and in-home settings, as well as respite care to caregivers.