sensitivity group

உணர்திறன் குழுக்கள் (உணர்திறன் சிச்சை என்பது ஒருவர் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் அறிந்து கொள்ள கொடுக்கப்படும் பயிற்சி)

தமிழ் விளக்கம்

சமூகஉளவியல் பிரச்சனைகளையோ, மனநோய்களையோ தீர்ப்பதை நோக்கமாகக் கொள்ளாமல், விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் குழுக்கள். 20 லிருந்து 30 பேர்களை உறுப்பினராகவும், ஒரு பயிற்சியாளரையோ அல்லது குழுப் பணிகளை எளிதாக்குபவரையோ தலைவராகக் கொண்டு இக்குழுக்கள் செயல்படும். உரையாடல் மூலமாகவும், அனுபவப் பகிர்வு மூலமாகவும் பரஸ்பரமாகத் தங்கள் உணர்வுகள் மற்றும் நடத்தைகள் மூலமாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பதன் மூலம், தங்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விழிப்புணர்வை மேம்படுத்த முயல்வர்.
பார்க்க; organizational development - நிறுவன மேம்பாடு - அமைப்பியல் கோட்பாட்டையும் மனித உறவுகள் அணுகுமுறையையும் கையாண்டு, நிறுவனங்களில் பணியாற்றும் பணிக்குழுக்களின் திறனை வளர்த்து, பணி மற்றும் இலக்கு ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்கவும், புதுமையாக்கல் மற்றும் ஒருங்கிணைப்பு மூலமாக பணியாளர்களிடையே தொடர்புகளை / உறவுகளை வலுப்படுத்தி உற்பத்தி திறன் மேம்படவும் கையாளப்படும் நிர்வாக உத்தி. இது தொடர்ந்து பின்பற்றப்படவேண்டிய நிர்வாக முறையாகும். இதற்காக உணர்திறன் பயிற்சி (sensitivity group) குழுக்கள், பயிற்சிக்குழுக்கள், T-group, பின்னூட்டம் பெரும் முறைகள் (feedback systems), செயல்முறை ஆலோசனை (process consultation), குழு உருவாக்கம் போன்ற பல முயற்சிகளை நிறுவனம் மேற்கொள்ளும்.

English

A training and consciousness raising group rather than one that meets to resolve psychosocial or mental disorders. Such groups typically consist of 10 to 20 members and a leader, called a trainer or facilitator. The members participate in discussions and experiential activities to demonstrate how groups function, to show how each member tends to affect others, and to help them become more aware of their own and other people's feelings and behaviors.