separation agreement
பிரிவு ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
பிரிந்து வாழத் தீர்மானித்த தம்பதியினர், பரஸ்பர புரிதலின் அடிப்படையில், தங்களுடைய எதிர்கால உறவுகள் எப்படி இருக்கவேண்டுமென்பதை, சாட்சியங்களுடன் எழுத்துபூர்வமாக செய்துகொள்ளும் ஒப்பந்தம். தம்பதிகளின் சொத்துக்களை எப்படிப் பிரித்துக் கொள்வது, குழந்தைகளின் பராமரிப்புப் பொறுப்புகள், அதற்காகும் செலவுகளைப் பங்கீடு செய்துகொள்வது போன்ற விவரங்களை விளக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் இருக்கும். இதை முறையாகப் பதிவு செய்துகொள்ளும் போது, அது சட்டப்படி செல்லத்தக்கதாயும், தம்பதிகள் இருவரும் ஒப்புக்கொண்டாலொழிய மாற்றமுடியாததாயும் அமையும். இது மாதிரியான பிரிவு ஒப்பந்தங்கள் பெரும்பாலும் விவாகரத்துத் தீர்ப்புகளில் உள்ளடங்கியிருக்கும்.
சட்டபூர்வமான பிரிவு - தம்பதியினர் தங்களின் மண உறவை முறித்துக் கொள்ளாமல் பிரிந்து வாழ நீதிமன்றத்தை அணுகி பெரும் தீர்ப்பு. பிரிந்து வாழும் இக்காலத்தில் அவர்கள் மனம் மாறி மீண்டும் தம்பதியராகக் கூடி வாழலாம். அல்லது விவாகரத்து செய்துகொள்ளலாம். ஆனால் விவாகரத்தென்பது மண உறவை முற்றிலும் முறித்துக் கொள்வது. சட்டபூர்வமான பிரிவென்பது விவாகரத்தின் முன்னோட்டமாக இருக்கலாம்.

English
An informal understanding or, more commonly, a written and witnessed agreement between spouses who intend to live apart, specifying the future conditions of their relationship. Usually the agreement describes how property is to be divided and covers custody of children and support payments. Formal agreements may be entered in official records and become legally enforceable and not subject to modification unless both parties want a change. The terms of a separation agreement are frequently incorporated into a divorce decree. See also legal separation.