separation anxiety
பிரிவுப் பதைப்பு, ஏக்கத் தனிமை / ஏக்கப் பிரிவு
தமிழ் விளக்கம்
தன்னுடைய முக்கியப் பராமரிப்பாளர் (குறிப்பாக தாய்) அருகில் இல்லாதபோது, அந்தத் தனிமை அல்லது பிரிவால் குழந்தைகளுக்கு ஏற்படும் பயம் மற்றும் பதட்டம். குழந்தை வளர வளர இப்பதட்டம் குறையும் அல்லது முழுதுமாக மறையும். கடுமையாக மன அழுத்ததிற்கு உள்ளாகும் போதோ அல்லது வாழ்க்கைப் பருவ மாற்றங்களின் (கல்லூரிக்காக வெளியிடங்களுக்கு செல்லும் போது, திருமணமாகி பெற்றோரைப் பிரியும் போது) போதோ இப்பதட்டம் மீண்டும் தலைதூக்கலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்கும் கூட ஏக்கத் தனிமை ஏற்படுவதுண்டு.
English
The fear that a young child experiences when threatened by the loss of the primary caregiver. This fear decreases or ends as the child gets older but often returns during acute stress, crisis, or life-stage transitions. Older children and adults sometimes suffer separation anxiety.