separation anxiety disorder of childhood
பிரிவுப் பதைப்புக் கோளாறு, குழந்தைப் பருவ பிரிவுப் பதட்டச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
குழந்தைகள் தங்களை எப்படி மற்றவர்களுடன் பிணைத்துக் கொள்கிறது என்பதையும், குழந்தைப் பருவத்தில் சமூகத்தொடர்புகள் எப்படி உருவாகி, படிப்படியாக வளர்ந்து, அதன் பின்னாளைய ஆளுமையில் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மேரி ஐன்ஸ்வொர்த் (M. Ainsworth) மற்றும் ஜெ பவுல்பி (J. Bowlby) என்ற ஆராய்ச்சியாளர்கள் விளக்கினார்கள். குழந்தைகளின் சமூக பந்தம் நான்கு நிலைகளில் நடக்கிறது 1. பிறந்ததிலிருந்து மூன்று மாதம் வரை, தாயின் முலையை உறிஞ்சுதல், அவரைப் பற்றிக்கொள்ளல், அவருடைய நடமாட்டத்தைக் கண்காணித்தல், அவரை அரவணைத்துக் கொள்ளும் நிலை 2. மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை தனக்குப் பரிச்சயமானவர்களிடம் சுகஉணர்வும், அன்னியர்களிடத்தில் பதட்டமும் (stranger anxiety) கொள்ளும் நிலை 3. ஆறு மாதத்திலிருந்து நடை பழகும் வரை தனக்குப் பரிச்சயமான பொருட்களுடன் பந்தமும், அது இல்லாத போது பதட்டமும் (separation anxiety disorder of childhood) அடையும் நிலை. 4. பிந்தைய பருவங்களில் தனக்குப் பரிச்சயமான / விருப்பமான பொருட்களையோ / மனிதர்களையோ தனக்கு நெருக்கமாக வைத்துக்கொள்வது எப்படி என்று உணர்ந்து செயல்படும் நிலை. இதில் மூன்று பொதுவான தன்மைகள் காணப்படுகின்றன. 1. பாதுகாப்பான பந்தம் (secure attachment), 2. தவிர்க்கும் பந்தம் (avoidant attachment), 3. பந்தம் நிலைபெறச் (resistant attachment) செய்யும் முயற்சி. இதில் குழந்தைப் பருவ பிரிவுப் பதட்டச் சீர்கேட்டில் குழந்தையின் முக்கிய பராமரிப்பாளர், குழந்தைக்கு அருகில் இல்லாதபோது குழந்தை பதட்டப்பட ஆரம்பிக்கின்றது. தன்னுடைய பராமரிப்பாளர் திரும்ப வரமாட்டாரோ என்றும், தான் தொலைந்து போவோமோ என்றும், கடத்தப்படுவோமோ என்றும், ஏதாவதொரு வகையில் பாதிப்புக்கு உள்ளாவோமோ என்றும் பயப்பட ஆரம்பிக்கின்றது. இந்த பயத்தினால் குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி, தூக்கமின்மை போன்ற உடல்ரீதியான உபாதைகளை உருவாகின்றன. இதனால் குழந்தைகள் தங்களுடைய பராமரிப்பாளரிடம் மிக நெருக்கமாக இருக்க விரும்புகிறது. அவர்கள் பிரியும் போது பதட்டம் கொள்கிறது. இது பொதுவாக 18 ஆம் மாதத்தில் தொடங்கி, நான்கைந்து வாரங்கள் நீடிக்கும்.
English
A childhood mental disorder characterized by excessive anxiety and fear when the major attachment figure goes away. The child becomes afraid that the caregiver will not return and will be harmed. The child also fears being lost, kidnapped, or victimized. Many children with this disorder develop somatic symptoms such as stomachache and nausea and are afraid of the dark and of sleep. These children will stay very close to the attachment figure and become tense when anticipating separation. The disturbance begins before age 18 and lasts more than four weeks.