separation-individuation

தனித்திருத்தலும் தனித்தன்மையுடனிருத்தலும்

தமிழ் விளக்கம்

மார்கரெட் மாலர் (Margaret Mahler) என்ற மனநல மருத்துவர் மனித வளர்ச்சி நிலைகளை, குறிப்பாகக் குழந்தை வளர்ச்சிப் பருவங்களை மூன்று நிலைகளாகப் பிரித்தார். அவையாவன 1. இயல்பான தன்மையப் பருவம் (Normal autistic phase - First few weeks of life), 2, இயல்பான இணைவாழ்வுப் பருவம் (Normal symbiotic phase - Lasts until about 5 months of age), 3. தனித்திருத்தலும் தனித்தன்மையுடனிருத்தலும் (separation-individuation) என்று பிரித்தார். இதில் தனித்திருத்தலும் தனித்தன்மையுடனிருத்தலுமான பருவத்தில் மேலும் மூன்று நிலைகளைக் குறித்தார். 3.1 தாயின் மடியில் இருந்துகொண்டே வெளிஉலகைப் பார்க்கும் குஞ்சு பொரிக்கும் நிலை (Hatching), 3.2 தாயிடமிருந்து விலகித் தவழ்ந்து நடைபயிலும் பருவம் (Practicing - 9-about 16 months), 3.3 தாயை விட்டு விலகியும், தாயின் கண்காணிப்பிற்குட்பட்டு வெளி உலகை அணுகும் மறுசீரனைவுப் (Rapprochement – 15–24 months) பருவம் (விடுதலை மற்றும் கண்காணிப்பை சமமாக விரும்பும் சமரச நிலை) என்று பிரித்தறிந்தார். இந்தப் பருவத்தில் ஏற்படும் மன நிலைப்பாடுகளும் (fixation), மனமுரண்பாடுகளும் பிற்காலத்தில் தற்பூசனையாளர்களாகவோ (narcissistic) அல்லது எதுவென்று தீர்மானிக்க இயலா நிலை, இயல்பான குறிதெரியா நோய்க்குறியுள்ளவர்களாகவோ (borderline disturbances) ஆக்கிவிடும் என்று மார்கரெட் மாலர் அறிந்தார். இதில் தனித்திருத்தலும் தனித்தன்மையுடனிருத்தலும் என்ற பருவத்தில் தன்னுடைய பராமரிப்பாளரை விட, தாயை விட தான் வேறுபட்டவன் என்ற சுய அடையாளம் குழந்தையிடம் வளர்வதாகக் கண்டறிந்தார்.

English

According to Margaret Mahler, a psychosocial stage in human development in which the young child develops a sense of self-identity and a recognition that he or she is distinct from the mother. See also individuation.