separation phase
(குழு வளர்ச்சியில்) பிரியும் நிலை
தமிழ் விளக்கம்
குழு வளர்ச்சி பொதுவாக பல நிலைகளைக் கொண்டதாகும். இதைப் புரிந்துகொள்ள பல்வேறு கருத்தாக்கங்கள் உள்ளன. குழு வளர்ச்சி நிலைகள் பற்றிய கருத்தாக்கங்கள் குழுவின் குறிக்கோளை ஒட்டியும் (Teleological models), குழு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்படும் உறவின் தன்மையை ஒட்டியும் (Dialectical models), குழு உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் விலக்கலை ஒட்டியும் (Evolutionary models) பல்வேறு ஆய்வாளர்களால் விளக்கப்பட்டிருக்கின்றது. அதில், கர்ட் லீவின் மாதிரி (Kurt Lewin's Individual Change Process), டக்மன்ஸ் மாதிரி (Tuckman's Stages model), டப்ஸ் மாதிரி (Tubbs' Systems model), பிசர் கோட்பாடு (Fisher's theory of decision emergence in groups) பூல்ஸ் பல்நிலை மாதிரி (Poole's multiple-sequences model) போன்றவை முக்கியமானதாகும். இந்த மாதிரிகள் ஒரே நிலையை பல்வேறு வார்த்தைகளால் விளக்குகின்றது. சமூகப்பணியாளர்கள் குழு வளர்ச்சியை விளக்க டக்மன்ஸ் மாதிரியைப் பெரும்பாலும் கையாளுவார்கள் அது ஐந்து நிலைகளைக் கொண்டதாகும். 1. Forming stage குழு உருவாகும் காலகட்டம். (அறிமுகக்கட்டம்) 2. Storming Stage குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் குழப்பக் கட்டம். 3. Norming Stage விதிகள், நடைமுறைகள் உருவாகும் காலகட்டம் 4. Performing stage குழு செயல்பாட்டுக் காலகட்டம் 5. Adjourning Stage குழு முடிவுறும் கட்டம்) ஆனால் மாறுபாட்டை உணரும் நிலையை விளக்கியிருப்பது கார்லாண்ட், ஜோன்ஸ் மற்றும் கொலோட்னி போன்றவர்கள், இவர்கள் விளக்கிய மாதிரியில் குழு வளர்ச்சி ஐந்து நிலைகளைக் கொண்டதாகும். 1. இணக்க நிலைக்கு முன் நிலை (Pre-affiliation) 2. அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்காக முயலும் நிலை (Power and control) 3. அந்நியோன்ய / நெருக்கமான நிலை (Intimacy) 4. மாறுபாட்டை / வேறுபாட்டை / தனித்துவத்தை உணரும் நிலை (Differentiation) 5. பிரியும் நிலை (Separation). இதில் கடைசி நிலைதான் பிரியும் நிலை அல்லது குழு முடிவுறும் கட்டம். இந்த நிலையில் குழு உறுப்பினர்கள் அதுகாறும் பெற்றிருந்த குழு அடையாளத்தைக் கடந்து, தங்களுடைய தனித்துவத்தை உணர்ந்து, குழுவிடம் கற்றுக்கொண்டதை வைத்து, குழுவின் துணையில்லாமல் பின்பற்றத்தக்க திறன் பெறுவர்.
English
The fifth and final stage in group development in which group members tend to regain their sense of individuality and autonomy from other members and become more oriented to life without the group. This phase occurs as preparation for termination and comes after the preaffiliation phase, the power-and-control phase, the intimacy phase, and the differentiation phase. Many other typologies also have been proposed to describe the phases in the typical life of groupwork or a therapy group.