separatism
பிரிவினைவாதம்
தமிழ் விளக்கம்
இன, மத, மொழி, நிற, இடம், பாலினம், பொருளாதார சமூகநிலை, வயது போன்ற அடையாளங்களின் அடிப்படையில் தன்விருப்புடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து தனித்திருப்பது / பிரிந்திருப்பது. இது பல வடிவங்களைக் கொண்டது. பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து தன் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதில் தொடங்கி, பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து முற்றிலும் விலகி சுதந்திரமாக, சகல அதிகாரங்களுடன் வாழவும், தனிநாடாகப் பிரிந்து செல்ல ஆயுதம் தாங்கிப் போராடுதல் என்று பல வடிவங்களைக் கொண்டது. இது தேசியப் பிரச்சனையாக மட்டுமல்ல சர்வதேச பிரச்சனையாகவும் உருவெடுக்கும்.
English
An ideology that espouses voluntary or compulsory segregation between peoples based on such differences as race, ethnic background, religion, age, or other statuses. See also apartheid, ghetto, and gray ghettos.