Serious Crime Index

கொடுங் குற்ற குறியீட்டெண்

தமிழ் விளக்கம்

கொடுங்குற்ற குறியீட்டெண் என்பது, அமெரிக்காவின் மையப் புலனாய்வுத் துறையின் ஒரே சீரான குற்ற அறிக்கை தயாரிக்கும் முயற்சியின் ஒரு பகுதி. எட்டு வகையான குற்றங்கள் கொடுங்குற்றங்கள் என்று பட்டியலிடப்பட்டு அதில் நான்கு வகைக் குற்றங்கள் மனிதருக்கு எதிராகவும் (கொலை, கட்டாயக் கற்பழிப்பு, காயமுண்டாகுமளவு தாக்குதல், மற்றும் வழிப்பறி) மற்ற நான்கு வகை உடமைகளுக்கு எதிராகவும் (கலவரம் செய்தல், வாகனத் திருட்டு, வீடுபுகுந்து கொள்ளையடித்தல், 50 டாலருக்கும் அதிகமான களவு) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் குறைந்த வருவாய்ப் பிரிவினரால் செய்யப்படுவது. வசதியானாவர்கள் செய்யும் மோசடி, கையாடல், தவறான விளம்பரம், வரி ஏய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற குற்றங்கள் கொடுங்குற்ற வரிசையில் சேர்க்கப்படாதது பொருளாதார பாராபட்சத் தன்மையைக் காட்டுவதாக அமைவதாக இம்முயற்சி விமர்சிக்கப்படுகிறது.

English

Part of the Uniform Crime Reports (UCR) issued by the Federal Bureau of Investigation (FBI) that lists eight crimes, four against persons (murder, forcible rape, aggravated assault, and robbery) and four against property (arson, motor vehicle theft, burglary, and larceny over $50). These crimes are more likely caused by people from the lower socioeconomic classes and do not reflect the types of crimes most commonly caused by more affluent people, such as fraud, embezzlement, false advertising, tax evasion, and environmental pollution.