serotonin

செரோடோனின்

தமிழ் விளக்கம்

உடலின் சீரான இயக்கத்திற்கு மூளையின் கட்டளைப்படி அகச்சுரப்பு அல்லது இயக்கு நீர்கள் சுரக்கின்றன. உடலியக்கத் தேவைகளை, மூளையானது அதன் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் என்னும் மின் அலை கடத்திகளின் மூலமாக நடத்துகிறது. நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான இரசாயன சமிக்ஞைகள் (chemical signals) சரியாக நடக்க, மூளைக்கும் உள்ளுருப்புகளுக்குமான தொடர்பு பாதிக்காமல் இருக்க செரொடோனின் (serotonin) என்னும் அகச் சுரப்பு நீர் / மூளைச் சுரப்பு நீர் உதவுகிறது. இதுவே பசி உணர்வு, உடல் வெப்பம், மன நிலை (mood), தூக்கம், வலி நிவாரணம், மன அமைதி போன்றவற்றை சம நிலையில் வைத்துள்ளது. அதிகக் கவலை, பதட்டம் போன்ற சமயத்தில், நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டு, செரடோனின் சுரப்பு குறையும். இதனால் பசி குறைந்தோ அல்லது அதிகமாகியோ, இரப்பை, மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபட்டு, ஆரோக்கியக் குறைவு, இரத்தசோகை, நோயெதிர்ப்பு சக்தி குறையும். செரடோனின் அளவு அதிகமாகும் போது உளக்கிளர்ச்சியும், குறையும் போது உளமந்தமும் ஏற்படும். செரடோனின் ஒரு குழல் சுருக்கியாதலால், அதிகமாகச் சுரக்கும் போது இரத்த நாளங்கள் சுருக்கப்பட்டும், குறைவாகச் சுரக்கும் போது விரிந்தும் இரத்த ஓட்டத்திலும், குருதி அழுத்ததிலும் சமநிலை தவறி இதய வலி ஏற்படலாம்.

English

A naturally occurring molecule in the body, secreted by activated platelets and cells of the brain. Serotonin is found to be related to mood, coronary artery disease, myocardial infarction, and angina pectoris. Depression occurs when the brain has too little serotonin; manic episodes can occur when serotonin levels are too high. Serotonin also acts as a potent vasoconstrictor and causes ischemia (localized tissue anemia) on normal human coronary arteries.