Service Corps of Retired Executives/Active Corps of Executives (SCORE/ACE)

ஓய்வு பெற்ற செயலர்களின் சேவைத் தொண்டரணி / செயலர்களின் செயல்பாட்டுக் குழு

தமிழ் விளக்கம்

அமெரிக்க சிறுதொழில் கழகத்தின் ஆதரவில் நடைபெறும் தன்னார்வத் தொண்டரணி. ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய அனுபவத்தையும், தொழில்நுட்பத் திறனையும் கொண்டு புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு, வழிகாட்டுகிறார்கள்.
பார்க்க: Senior Corps - மூத்தோர் தொண்டரணி - அமெரிக்கவின் தேசிய சமுதாய சேவை நிறுவனம், அமெரிக்கக் கலாச்சாரம், சேவை மற்றும் பொறுப்புடமையை வலுப்படுத்த, வருடத்திற்கு 50 இலட்சம் மனித நாட்களுக்கு இணையான தன்னார்வத் தொண்டர்களின் சேவையை, அதற்கான நிதி ஆதாரங்களை, அமெரிக்கத் தொண்டரணி (AmeriCorps), அமெரிக்காவிற்கான கற்றலும் சேவையும் (Learn and Serve America), மூத்தோர் தொண்டரணி (Senior Corps) போன்ற பல்வேறு திட்டங்களின் மூலமாகத் திரட்டுகிறது. அதில் மூத்தோர் தொண்டரணி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அதில் ஓய்வுபெற்ற மூத்தோர் தன்னார்வ சேவை (அனுபவ முதிர்ச்சியால் வழிநடத்தும் திட்டம் - Retired and Senior Volunteer Program - RSVP), மூத்தோர் தோழமைத் திட்டம் (மூத்த குடிமக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது Senior Companion Program -SCP), வளர்ப்பு (தாத்தா பாட்டி) மூதாதையர் (முதியோர் மூலம் குழந்தைகளைப் பராமரிப்பது - Foster Grandparents program) போன்ற மூன்று திட்டங்கள் முக்கியமானது.

English

A volunteer program sponsored by the U.S. Small Business Organization. Its members use their skills and experience to help people start and develop their own businesses. See also Senior Corps.