service integration (SI)

சேவை ஒருங்கிணைப்பு

தமிழ் விளக்கம்

ஒரு சமுதாயத்தில் (ஒரு பகுதியில்) செயல்படும் பல்வேறு சேவை நிறுவனங்களின் சேவைகளை அங்கு வாழும் மக்களின் தேவைகளுக்கேற்பவும், ஒருநிறுவனம் செய்யும் சேவையை இன்னொரு நிறுவனம் தேவையற்று செய்வதைத் தடுக்கவும், சேவை வழங்குதலில் தென்படும் இடைவெளியை அகற்றவும், குறைக்கவும், எதிர்காலத்திற்கு தேவைப்படும் மாதிரி புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும் செய்யப்படும் முயற்சி. சேவை ஒருங்கிணைப்பு என்பது சேவை நிறுவனங்களை ஒருங்கிணைப்பது அல்ல. மாறாக ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய அடையாளங்களைத் தக்க வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் சமூகத் தேவைகளை ஒருங்கிணைக்கச் செய்யப்படும் முயற்சி. தேவையற்ற தகுதிச் சோதனைகள், தேவையற்ற பதிவுமுறைகள், காத்திருத்தல், நிர்வாகத் தடங்கல்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பின் மூலம் நிவர்த்திக்கலாம்.

English

The comprehensive process of coordinating the activities of social services organizations in communities to meet a range of needs by client groups so that duplications and service gaps are minimized. This process also includes establishing new organizations and service provider systems, identifying current and future unmet needs, and facilitating the efforts of various organizations to reach mutual predetermined goals. Communities include neighborhoods, geographical regions, ethnic groups, and other identified groups. SI is not synonymous with agency collaboration; in the latter, different organizations communicate with one another to provide services while retaining their own goals and methods.