service strategy

சேவை வியூகம், சேவைச் செயல்திட்டம், சேவை வினைமுறைத்திறன்

தமிழ் விளக்கம்

உதவி தேவைப்படுகிறவர்களுக்கு பணமாகக் கொடுக்காமல், பொருட்களாகவும் (உணவு, வீட்டு வசதி), சேவைகளாகவும் (போக்குவரத்து, மருத்துவ கவனிப்பு, ஆலோசனை) தந்துதவும் சமூகநலக் கொள்கை. எடுத்துக்காட்டாக வீடு கட்டிக்கொள்ள பொருளுதவி செய்வதைவிட, வீட்டையே கட்டிக்கொடுக்கும் அணுகுமுறை. பணமாக அல்லாமல் பொருளாகக் கொடுத்துதவும் அணுகுமுறை.
பார்க்க: income strategy - வருமான உத்திகள், வருமான ஏற்பாடு, நேரடிப் பொருளுதவி - வரையறுக்கப்பட்ட தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, அவர்களின் தேவைகளை பொருட்களாகவோ (உ.ம். இலவச தொலைக்காட்சி பெட்டி), சேவைகளாகவோ (ஆலோசனை, சட்ட உதவி, மருத்துவ சிகிட்சை) வழங்காமல், நேரடியாகப் பண உதவி செய்வது. உதாரணமாக வீடற்ற ஏழைகளுக்கு, அரசு வீடுகளோ, குறைந்த வாடகையில் வீடுகளோ கொடுக்காமல், அவர்கள் தங்கள் குடும்ப வருமானத்தை எப்படிச் சிக்கனமாக நிர்வகிப்பது என்று ஆலோசனை வழங்காமல், நேரடியாகப் பண உதவி அளித்து, தங்களுக்கான வீடுகளைத் தேர்வு செய்து கொள்ளும் சுதந்திரத்தை வழங்குவது.

English

A social welfare policy designed to help clients obtain needed goods and services (such as food, housing, transportation, health care, or counseling) rather than direct monetary aid. For example, a service strategy would be to provide public housing for a needy client rather than providing the client with money for housing. This strategy is sometimes described as providing benefits in-kind rather than in cash. See also income strategy.