settlement houses

சமுதாய ஊழியரகங்கள்

தமிழ் விளக்கம்

பல்வேறு சமூகப் பொருளாதார கலாச்சாரப் பின்னணியைச் சார்ந்தவர்கள், குறிப்பாக பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள், நகர்ப்புறங்களிலிருந்த ஏழ்மையான குடியிருப்புகளில், அந்த மக்களோடு தங்கியிருந்து, தங்களுடைய அறிவு மற்றும் திறன்களின் மூலம் சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டும், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு தேசியக் கொள்கைகளை வடிவமைக்கவும் பாடுபட்ட செயல்முறை. கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், சமூகப்பணியாளர்கள் போன்ற பன்முகத் தன்மை கொண்ட குழு, தங்கள் செயல்பாட்டிற்குத் தேவையான நிதியைத் தாங்களே திரட்டிக்கொண்டு, சமூகக் குழுப்பணி, சமுதாய அமைப்பு, மற்றும் சமுதாயத் திட்டமிடல் போன்ற சமூகப்பணி முறைகளைக் கையாண்டு, சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டார்கள். லண்டன் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட டாயின்பீ மன்றம் இதுமாதிரியான சமூகச் சீர்திருத்தம் மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. டாயின்பீ மன்றத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் நூற்றுக்கணக்கான சமுதாய ஊழியரகங்கள் உருவாகி, அறிவு ஜீவிகளின் சமூக ஆர்வத்திற்கு வடிகாலாய் அமைந்தது. சமுதாய ஊழியரகங்கள் என்னும் சமூக மேம்பாட்டு அணுகுமுறை, இன்றளவும் தொடர்ந்தாலும், மக்களோடு தங்கியிருந்து பணியாற்றும் நடைமுறை வழக்கொழிந்து, மக்களுக்கு வேறுவகையில் வழிகாட்டும் முயற்சிகள் தொடர்கின்றது. சமுதாயங்களின் சுய சார்புத் தன்மையை வலுப்படுத்தவும், குற்றங்களையும், இளங்குற்றவாளிகளைக் குறைக்கவுமான செயல்பாடு மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்கான அரசியல் செயல்பாடு என்று பல தளங்களில் சமுதாய ஊழியரகங்கள் தங்களின் பணியைத் தொடர்கின்றன.
பார்க்க: Barnett, Samuel A. - பார்னெட், சாமுவேல் ஏ (1844-1913) ஆக்டேவிய ஹில்லுடன் இணைந்து முதலில் சமுதாய ஊழியரகங்கள் (Settlement House) அமைப்பைத் தோற்றுவித்தவர். டாயின் பீ ஹால் ஸ்தாபகர். சமுதாய அமைப்பாளர். வீட்டு வசதி மேம்பாட்டிற்காக உழைத்தவர். மனநோயாளிகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு செயல்பட்டவர் ..இங்கிலாந்தில் அறக்கட்டளை அமைப்பு வளரத் தூண்டுகோலாயிருந்தவர். ஜேன் ஆடம்ஸ் மற்றும் எலன் கேட்ஸ் ஸ்டார், ஹல் ஹவுஸ் (Hull House Settlement) செட்டில்மெண்ட் ஆரம்பிக்க முன்மாதிரியாயிருந்தவர்.
Barrett, Janie Porter - பாரெட், ஜேன் போர்ட்டர் (1865-1948) ஆப்ரிக்க அமெரிக்கப் (கருப்பினத்தவர்) பெண் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர். அவர்களுக்கான முதல் சமுதாய ஊழியரகத்தை (லோகஸ்ட் தெரு ஊழியரகம் - Locust Street Social Settlement) ஆரம்பித்தவர். கருப்பினப் பெண்களுக்கான முதல் தொழிற் பள்ளியை ஆரம்பித்தவர்.
Hull House - ஹல் மாளிகை - சமூகப் பணியில் சமுதாய அமைப்புப் பாடமுறையைத் தோற்றுவித்தவர் என்ற பெருமைக்குரிய ஜேன் ஆடம்ஸ் மற்றும் எலன் கேட்ஸ் ஸ்டார் என்ற இரண்டு பெண்மணிகளால் 1889 ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தில், ஐரோப்பியாவிலிருந்து புலம் பெயர்ந்த மக்களுக்குச் சேவை செய்ய ஆரம்பிக்கப்பட்டதுதான் Hull House என்றழைக்கப்பட்ட சமுதாய ஊழியக் குடியிருப்புக் குழு அல்லது கூட்டுவாழ்வுக் குழு (Settlement House). இதுதான் அமெரிக்காவில் உருவான முதல் சமுதாய ஊழியத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டு வாழ்வுக்குழு. இது மாதிரியான ஊழியர் கூட்டு வாழ்வுக் குழுக்கள் வறுமை வயப்பட்ட நகர்ப் புறச் சேரிகளில் தொடங்கப்பட்டு, அம்மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அனைத்துச் சேவைகளையும், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியையும் வழங்கின. Hull House ஊழியர் குடியிருப்பை முன்மாதிரியாக வைத்து, 1920 களில் அமெரிக்காவெங்கும் 500 ஊழியர் குடியிருப்பகங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. 1965 Hull House அமெரிக்காவின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அருங்காட்சியகமாக்கப்பட்டுள்ளது.

English

Neighborhood-based facilities established in most urban centers to bring together people of different socioeconomic and cultural backgrounds to share knowledge, skills, and values for their mutual benefit. These centers are financed primarily through voluntary contributions and grants and are staffed primarily by people indigenous to the neighborhood, educators, recreation specialists, and social workers whose primary orientation is social group work, community organization, and social planning. The social settlement movement began in London in 1884 at Toynbee Hall, where university students lived and met with their neighbors to exchange ideas. Soon hundreds of settlement houses were established in the United States with the same goals. Many have discontinued the residential aspect of the program, but some remain active in establishing neighborhood self-help programs and crime and delinquency abatement efforts and are involved in political activism.