severity index

கடுமைக் குறியீட்டெண், கடுந்துயரக் குறியீட்டெண்

தமிழ் விளக்கம்

தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களது பிரச்சனைகளின் தீவிரத் தன்மையைக் குறிக்க சமூகப்பணியாளர்கள் கையாளும் குறியீடு. இக்குறியீடு Peron -in- Environment என்ற மானுடச் சூழல் கண்ணோட்டம் / சுற்றுச் சூழலைப் பற்றிய கண்ணோட்டம் / மானுடச் சுற்றாடல் தொகுப்பு என்ற நடைமுறையைப் பின்பற்றிக் கொடுக்கப்படும் குறியீடு. தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் அல்லது மனிதர்கள், சக மனிதர்களுடன் பொதுவாகத் தொடர்புகொள்ளும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும், அதை வகைப்படுத்தி விளக்கவும் சமூகப்பணியாளர்கள் கையாளும் ஒரு அறிதல் முறை. இந்த முறையை, தங்களிடம் வரும் முழாள்களின் (வயதிற்கு வந்தவர்கள் - adult) சமூகச் செயல்பாடுகள் தொடர்புடைய அனைத்துத் தகவல்களை முறையாகச் சேகரிக்கவும் அதனடிப்படையில் முழாள்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மதிப்பீடு செய்யவும் சமூகப்பணியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையின்படி வாடிக்கையாளரின் பிரச்சனைகளை ஆறு நிலைகளாக வகைப்படுத்துகிறார்கள் 1. செயலிழைக்க வைக்கும் தன்மை கொண்டது (catastrophic), 2. அசாதாரணமான கடுமை கொண்டது (very high severity), 3. அதிகக் கடுமை கொண்டது (high severity), 4. மிதமான கடுமை கொண்டது (moderate severity), 5. குறைந்த கடுமை கொண்டது (low severity), 6. பிரச்சனை ஏதுமில்லை (no problem).

English

A rating system used by social workers to indicate the degree of seriousness of a client's problem. One of the several indexes of this type was developed for the Person-in-Environment (PIE) System, which delineates six levels on its severity index: catastrophic, very high severity, high severity, moderate severity, low severity, and no problem.