sex addiction

செக்ஸ் போதை, காமுகன், காமுகி

தமிழ் விளக்கம்

உடலுறவுக்காகவும் அதற்கினையான தூண்டலுக்காகவும், கட்டுக்கடங்காத ஆசைகொண்டு, அதைப்பற்றிய கற்பனையில் முழுதுமாக மூழ்கி, அதற்காக மற்றவர்களுடனான கள்ளத்தொடர்பை சிறிதுசிறிதாக விரிவாக்கி, உண்மையான நெருக்கத்தை அடைய இயலாமல், மற்ற போதைப்பழக்கத்தைப் போன்று நியாயப்படுத்தமுடியாத நடத்தைகளினால் எல்லோராலும் இகழ்ச்சிக்குரியவராக நடந்துகொள்ளும் செயல். இது மாதிரியான பாலுறவு மிகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அளவுக்கு அதிகமாக சுயஇன்பம் பெறுவதிலும், ஆபாசப் பாலுறவுப் படங்களைப் பார்க்க அதிக நேரம் செலவிடுவதும், பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது, தொலைபேசி மற்றும் இணையத்தின் மூலமாக வழங்கப்படும் பாலுறவுச் சேவைகளைப் பயன்படுத்துவதுமான நடத்தைகளில் ஈடுபடுவர். இன்னும் சிலர் மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ள விழைவதும், தங்களுடைய உடலைக்காட்டி மகிழ்வதும், அடையாளக் காமத்தில் ஈடுபடுவதும், மாற்றுப் பாலினத்தவரை மோகப்பார்வை பார்த்து சங்கடப்படுத்துவதும், ஆபாசமாகத் தொலைபேசியில் பேசுவதும், குழந்தைகளிடம் சில்மிஷம் செய்வதும் அல்லது கற்பழிப்பதுமான சட்ட விரோத நடத்தைகளில் ஈடுபடுவார். செக்ஸ் படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்து செக்ஸிற்கு அடிமையானவர்களுக்கும், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டு அடிமையானவர்களுக்கும் ஒரே மாதிரியாக முளை வேலை செய்வதைக் கண்டுபிடித்துள்ளனர். போதைக்கடிமையானவர்கள் தங்கள் போதைப் பழக்கத்தால், தங்கள் சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் பல பிர்ச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுதல், ஆபாசப் படம் பார்த்தல் போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டு செக்ஸிற்க்கு அடிமையாகியவர்களும் இதே போன்ற சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். செக்ஸ் அடிமைகளுக்கு ஆபாசப் படம் காண்பிக்கும் போதும், போதைக்கு அடிமையானவர்களுக்கு போதைப் பொருட்களை காட்டும் போதும், மூளையில் ஒரே இடத்தில் செயல்பாடுகள் நிகழ்வதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

English

A compulsive craving for sexual intercourse or stimulation, usually accompanied by extreme interpersonal dependence, preoccupation with romantic fantasies, inability to achieve or maintain true intimacy, and behavior that is ultimately demeaning and unacceptable. Self-help groups, 12-step programs, and professionals treat this compulsion as a form of addiction.