sex discrimination

பாலினப் பாகுபாடு

தமிழ் விளக்கம்

பாலினப் பாகுபாடு என்பது பால் அல்லது பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகும். இது பொதுவாக ஆண்களுக்கு முக்கியத்துவம் தருவதையும், பெண்களை உதாசீனப்படுத்துவதையும் குறிக்கும். ஒரே மாதிரியான பணியில் ஆண்களுக்கு அதிக ஊதியமும், பெண்களுக்குக் குறைத்துக் கொடுப்பதிலும் இது வெளிப்படுகிறது. சில நாடுகளில் சிலவகைப் பாலினப் பாகுபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. வேறுபல நாடுகளில் வெவ்வேறு சூழல்களில் பாலினப் பாகுபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் பாலினப் பாகுபாட்டால் சிசுக்கொலைகளைத் தவிர்க்க கருவின் பாலினத்தை முன்னரே பெற்றோருக்கு அறிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பாலின வாதம் (Sexism) என்ற சொல், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு பாலினம் மற்றதை விட உயர்ந்தது, சிறப்பான திறன் கொண்டது, மதிக்கப்பட வேண்டியது என்ற எண்ணம் அல்லது நம்பிக்கையைக் குறிப்பிடுவதாக அமைந்திருந்தது. இது பிறபாலினத்தவரிடையே பாகுபாடு காண்பதையும், மற்ற பாலினத்தவரிடம் வெறுப்பு காட்டுவது, முன்தீர்வு கொள்வது என்பனவும், ஆண்களுக்கான பண்புகள் இவையெனவும், மகளிருக்கான பண்புகள் இவையெனவும் முன்மொழிதலும், பாலின வாதம் அல்லது பாலினப் பாகுபாட்டில் உள்ளடங்கியது. இது ஆணாதிக்கம் மற்றும் பெண்ணாதிக்கம் எனவும் வழங்கப்படுகிறது.
பார்க்க: Gender Bias - பாலினப் பாரபட்சம், ஆண்கள் மற்றும் பெண்கள் பற்றிய பாரபட்சக் கண்ணோட்டம்.

English

Treating people differently based on their gender. Usually the term refers to favorable treatment of males and relegation of females to subordinate positions. Sex discrimination is manifested in such activities as promoting men over equally capable women or paying male employees more than female employees for the same or comparable work. See also gender bias.