sex education

பாலியல் கல்வி

தமிழ் விளக்கம்

பால் என்பது = ஆண், பெண் ஆகிய இரு வேறுபட்ட உடல், உள அமைப்பை கொண்ட தன்மை. இயல் என்பது = செயல்பாடு அல்லது இயங்குதல் என்று பொருள் கொள்ளலாம்.
பாலியல் என்று இணைக்கும் போது ஆண் மற்றும் பெண் ஆகிய இரு வேறுபட்ட பாலினத்தாருக்கு இடையிலான செயற்பாடுகளைப் பற்றியது என்பதாகும். இந்த வேறுபாடுகளை விளங்கிக் கொள்ள வைப்பது அல்லது புரிய வைக்க முயற்சி செய்வதுதான் பாலியல் கல்வியின் நோக்கம். பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும். பாலியல் கல்வி மூலம், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடலுறுப்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன, அதன் விளைவுகள் என்ன, அந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று வளரிளம் பருவத்தினருக்குக் கற்றுக் கொடுக்கின்றது. பருவ வயதுடைய ஆண், விந்து என்றால் என்ன, சுய இன்பம் மற்றும் மாற்றுப்பால் இச்சை என்றால் என்ன, ஆண்குறியில் ஏற்படும் விரைப்புத் தன்மை போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும் அதே மாதிரி ஒரு இளம் பெண், மாதவிலக்கு என்றாலென்ன, சரியாகத் தூய்மை செய்து கொள்ளும் முறை, மார்பக வளர்ச்சி, கருத்தரிக்கும் முறை, பாதுகாப்பு, பெண் கருத்தடை முறைகள் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். பாலியற் கல்வி தேவையா என்பது பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகிறதெனினும், அது ஓரளவுக்கேனும் பாடசாலைப் பாடத்திட்டத்தில் காணப்படுகிறது. எயிட்சின் தீவிரப் பரவல் பாலியற் கல்வியின் தேவையை அதிகரித்துள்ளது. ஆயினும் எந்த வயதில் பாலியற் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதிலும், எத்தகைய விசயங்கள் கற்பிக்கப்படலாம் என்பதிலும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

English

Providing knowledge about the human reproductive system, often including information about the anatomy and physiology of the male and female reproductive organs, fertilization, fetal development, childbirth, contraception, family planning, reproductive technology, protection from sexually transmitted diseases (STDs), responsible sexual behavior, and concepts of eroticism and love.