sex therapy

பாலியல் சிகிச்சை, பாலியல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை

தமிழ் விளக்கம்

உளவியல் சார்ந்தோ, உடலியக்கம் சார்ந்தோ உருவாகிற மானுடப் பாலியல் தொடர்பான திறனிழைப்பைச் சரிசெய்யக் கொடுக்கப்படும் பிணிசார்ந்த நிபுணத்துவ சிகிச்சை. பாலியல் சிகிச்சை என்பது உடலியக்கக் குறைபாட்டாலோ (நோயினாலோ) அல்லது வேறு மருத்துவ சிகிச்சைக்குத் துணையாகவோ இல்லாமால், உளவியல் ரீதியாக ஏற்படும் பாலியல் செயலிழைப்பைச் சரியாக்கக் கொடுக்கப்படும், நிபுணத்துவம் தேவைப்படும் பிணிசார்ந்த சிகிச்சைமுறை. இந்தச் சிகிச்சை பெரும்பாலும் தம்பதியினருக்கு, ஆண் - பெண் நிபுணர்கள் ஒன்றிணைந்து கொடுக்கும் சமூக உளவியல் சிகிச்சை. பாலியல் சிகிச்சை பெரும்பாலும் நான்கு முறைகளில் கொடுக்கப்படுகிறது. முதலாம் நிலையில் தம்பதிகளுடைய தாம்பத்திய உடலுறவு விருப்பங்கள் இயல்பானதுதான் என்றும் அதில் தவறேதுமில்லை என்று சுட்டிக்காட்டும் நிலை. இரண்டாம் நிலையில் அவர்களுடைய தாம்பத்திய உறவில் முழு திருப்தியடைய அவர்களுக்கு ஆலோசனை சொல்வது. மூன்றாம் நிலையில் தாம்பத்திய உறவில் செய்யும் சிறுசிறு தவறுகளைக் களைந்து, திருப்தியற்ற நடத்தைகளை எப்படி மாற்றிக்கொள்வது என்பதற்குக் குறிப்பிட்ட ஆலோசனைகளைத் தந்துதவுவது. நான்காம் நிலையில் தம்பதியினரை முழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த முடிவுகளின் அடிப்படையில், அவர்களுடைய உடலுறவுப் பழக்கத்தை ஆராய்ந்து, மருத்துவ சிகிச்சையோடு சமூக உளவியல் மற்றும் உளசிகிச்சை அளிப்பது. இந்த சிகிச்சை முறைகளில் உளஇயக்க அணுகுமுறையைக் கையாள்பவர்கள், பிரச்சனைக்குக் காரணமான உள முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு, அந்த முரண்பாடுகளை அகற்றுவதன் மூலம் பிரச்சனையிலிருந்து மீண்டு வர உதவுவார்கள். நடத்தை மாற்ற அணுகுமுறையைப் பின்பற்றுபவர்கள், தம்பதிகள் சில உணர்வுகளை மறக்கவும், உடலுறவில் சில நுட்பங்களைக் கையாண்டு அதிக திருப்தி அடையவும் கற்றுக் கொடுப்பார்கள்.
non consummation என்ற தாம்பத்திய உடலுறவில் முழுநிறைவடையாதவர்களுக்கு, premature ejaculation என்ற விரைவுக்கலிதம் என்ற புணர்ச்சிப் பரவச நிலைக்கு முன்னரே விந்து வெளியேறல், விரைவாக விந்து வெளியேறல் குறையுள்ளவர்களுக்கு, erectile disorder என்ற ஆண்குறி விறைப்பாக முடியா கோளாறு, ஆண்குறி ஓங்கல் பிசகு உள்ளவர்களுக்கு, low libido என்ற குறைவான பாலியலுந்தல் / இன்ப இயல்பூக்கம் / காமவேட்கை / புணர்ச்சித் திறன், புணரார்வமின்மை உள்ளவர்களுக்கு, unwanted sexual fetishes என்ற தேவையற்ற அடையாளக் காமம், உயிரிலாப் பொருட்களால் தூண்டப்படும் தேவையற்ற காம இச்சை உள்ளவர்களுக்கு, sexual addiction என்ற மிகை பாலியக்கம் அல்லது சிற்றின்ப மோகமுள்ளவர்களுக்கு, உடலுறவின் போது ஏற்படும் வலி (painful sex) உணர்பவர்களுக்கு, உடலுறவில் தன்னம்பிக்கையற்ற உளப்பாங்கு (lack of sexual confidence) கொண்டவர்களுக்கு, பாலியல் பலாத்காரங்களுக்கு உட்பட்டவர்களை இயல்பு நிலைக்கு திரும்ப உதவுவது (people who are recovering from sexual assault), மனக் கவலை, சோர்வு மற்றும் சூழ்நிலைக் காரணங்களால் உடலுறவில் முழுமையாக திருப்தி அடைய முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு - இதுபோன்ற பல்வேறு பாலியல் திறனிழைப்பைச் சரிசெய்து, தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும் பாலியல் சிகிச்சை கையாளப்படுகிறது.

English

Professional clinical treatment of the psychological and physiological dysfunctions of human sexuality. Such treatment is now typically provided to couples in cotherapy situations and provided by male–female teams of therapists. There are four levels of such therapy: (1) providing permission-conveying to the couple that their behaviors and desires are normal; (2) providing general information-helping the couple know how to get the most out of sexual relationships; (3) providing specific information-advising the couple about how to correct some sexual disorders or improve some unsatisfactory behaviors; and (4) providing intensive sex therapy. Intensive sex therapy begins with thorough physical examinations to rule out or correct physiological problems. This examination is followed by intensive psychosocial and sexual history taking. If the sex therapists use psychodynamic perspectives, the treatment is likely to be more insight-oriented work toward resolving underlying conflicts that lead to the problem. If the sex therapists use behavioral perspectives, the treatment involves teaching the couple techniques for greater success and using systematic desensitization and other methods to achieve specified goals.