sexist language

ஆபாச மொழி, பாலினப் பாகுபாட்டு மொழி

தமிழ் விளக்கம்

இரண்டு பாலினங்களில் ஏதாவதொன்றின் தன்மையை மிகைப்படுத்தியோ அல்லது அவ்வாறு அர்த்தம் கொள்ளும்படியாகப் பேசுவது மற்றும் எழுதுவது. அது மாதிரியான சொற்களைப் பயன்படுத்துபவருக்கும், அதைக் கேட்பவருக்கும், பாலினங்களைப் பாகுபடுத்தி பேசுகிறோம் அல்லது புரிந்துகொள்கிறோம் என்பது தெரிந்தோ அல்லது தெரியாமலோ நடக்கலாம். மனிதகுலத்தைப் பற்றிய பொதுவான தன்மையைக் குறிக்கும்போது அதை ஆணினத் தன்மையாக மட்டும் குறிப்பது. எடுத்துக்காட்டாக பூமியிலுள்ள உயிரனங்களில் ஆண்களே மிகவும் புத்திசாலிகள் என்று குறிப்பிடுவது. இருபாலரும் செய்யும் ஒரு செயலில் அதை ஆண்கள் மட்டும் செய்வதாக பிரதிப்பெயரை பயன்படுத்துவது. எடுத்துக்காட்டாக ஒரு வாடிக்கையாளர் தீர்மானித்துவிட்டால் அவர் தனக்கான உதவியை / வழியைத் தேடிக்கொள்வார் என்று குறிப்பிடுவது.
பார்க்க: unbiased writing - நடுநிலையான / நெறிகோடாத / பக்கச் சார்பற்ற எழுத்து / செய்தி - மக்களைப் பற்றியும் குழுக்களைப் பற்றியும் பாரபட்ச மனோபாவமில்லாமலும், முன்னபிப்பிராயங்கள் (தப்பபிப்பிராயம் / எதிர்மறை கருத்துக்கள்) எதுவுமற்று ஒன்றைப் பற்றி ஆவனப்படுத்துதல் அல்லது செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல். எடுத்துக்காட்டாக மனிதர்களைக் குறிப்பிடும் போது பாலின அடையாளச் சுட்டுப்பெயர்களைக் குறிக்காது, ஆண் / பெண் என்றோ திரு, திருமதி என்றோ குறிக்காமல் அவர் அல்லது திருவாளர் என்று குறித்தல். போலீஸ்காரர் / போலீஸ்காரி என்று குறிக்காமல் காவலர் என்று குறித்தல். அதேபோன்று மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் இன / மொழி / மத அடையாளங்களைத் தவிர்த்தல்.

English

The use of written or spoken words that implies or conveys the idea that one of the sexes is more important than the other. This use may occur intentionally or unintentionally and exists whether or not the producer of the words or the receiver of the words consciously recognizes that such an idea is being communicated. Sexist language is found most commonly in using males to represent humanity (for example, "Man is the most intelligent creature on earth") or applying generic masculine pronouns for both sexes (for example, "If a client is motivated, he will find a way to get help"). See also unbiased writing.