sexual abuse

பாலியல் துஷ்பிரயோகம்

தமிழ் விளக்கம்

பரஸ்பரம் அறிமுகமானவர்களுக்குள், ஒருவர் மீது இன்னொருவர் பலாத்காரத்தைப் பயன்படுத்தியோ, அச்சுறுத்தியோ, சம்மதம் தெரிவிக்க இயலாநிலையிலோ விருப்பத்திற்கு மாறாக உடலுறவு கொள்ளவோ அல்லது சிற்றின்ப சில்மிஷ நடத்தையிலோ ஈடுபடுவது. தீடீரென்று எதிர்பாராத விதமாக, குறுகிய காலத்தில், எப்போதாவது நிகழும் பாலியல் பலாத்காரத்தையும் பாலியல் வன்முறை என்பர். மேலும், பாலியல் துஷ்பிரயோகம் என்பது எவரொருவர் தன்னுடைய பாராமரிப்பில், தன்னைச் சார்ந்திருக்கும் வயது குறைவான குழந்தையை காட்டாயப்படுத்தியோ, சாதுர்யமாகச் செயல்பட்டோ சிற்றின்ப இச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்வதையும் குறிக்கும்.
பாலுறவு சம்மத வயதிற்குக் குறைவான வயதுடையவர்கள் மீது செலுத்தப்படும் துஷ்பிரயோகம் சட்டப்படி கற்பழிப்பு என்றே கருதப்படும். குழந்தைகளுடனான பாலுறவு (Child sexual abuse) அல்லது பாலியல் வன்முறை எனப்படுவது பாலுறவுக்கான அறிவு எட்டப்படாத குழந்தைகளுடன் பாலுறவு கொள்வதூம் அவர்களைப் சிறார்களைப் பாலியல் நடத்தைகளில் ஈடுபடுத்துவதைக்குறிக்கும். இதுவும் பாலியல் வன்மம் என்றே வரையறுக்கப்படுகிறது. இந்த மனநிலை ஒரு மனநோயாக (Pedophilia) வரையறுக்கப்பட்டுள்ளது. சிறார் பாலியல் குற்றங்களில், பாலியல் முறையில் தொடுதல், தொடவைத்தல், பாலியல் செயற்பாடுகளில் பயன்படுத்தல், வன்கலவி, பாலியல் உறுப்புகளை அல்லது ஆபாசப் படங்களைக் காட்டுதல் எனப் பல தரப்பட்ட நடத்தைகள் அடங்கும். பாலியல் வன்முறை எனப்படுதில், பாலியல் வன்புணர்வு, பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாயப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி, மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு எனப் பல வகைக் குற்றங்கள் அடங்கும். ஒரு பெண் அல்லது ஆண், குடும்பம் விரும்பாத ஒருவருடன் காதல் அல்லது உடலுறவு கொண்டார் என்பதற்காக வன்முறைக்கு உட்படுத்துவதையும் பாலியல் வன்முறையாகவே குறிக்கப்படுகிறது. பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரை பாலியல் துஷ்டன் என்றும் சில்மிஷக்காரன் என்றும் கூறுவர்.

English

The exploitation and mistreatment of children and adults in ways that provide erotic gratification for the abuser. Abusers tend to have serious psychological problems such as a personality disorder, paraphilia or another sexual disorder, or psychosis. Victims often cannot or are unwilling to understand or resist the advances of the abuser. Sexual abuse can include sexual intercourse without consent (or when the victim is younger than the age of consent), fondling genitalia, frotteurism, taking or showing pornographic pictures, and other forms of sexual acting out. Some social workers also include rape, seduction, sexual harassment, and sexual coercion as other forms of sexual abuse.