sexual arousal disorder
பாலுணர்வுத் தூண்டல் சீர்கேடு
தமிழ் விளக்கம்
உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தூண்டி சம்போகத்திற்குச் (பாலுறவு) சம்மதிக்க வைப்பதில் ஏற்படும் கோளாறு. புணர்ச்சியின் போது அடையாளப்படுத்தப்பட்ட நான்கு நிலைகளில் 1. உணர்ச்சியூக்க நிலை 2. புணர்ச்சியில் நிலைபெறல், 3. பாலின்பப் பரவசம், 4. தளர்வு நிலை போன்ற நிலைகளில், arousal என்பது முதல்நிலை. இந்த நிலையில் பெண்ணுருப்பைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இதயத்துடிப்பு அதிகமாகி தோல் வெளிறும். முலைக் காம்புகள் நேராகும் மற்றும் முலைகள் விரியும். ஆண்களுக்கு விதைகள் சுருங்கி, ஆண்குறியில் இரத்த ஓட்டம் அதிகரித்து ஆண்குறி விறைப்பாகும். இதில் மந்த நிலை ஏற்படின் புணர்ச்சியில் நிலைபெறமுடியாமல், பரவசத்தை எட்டமுடியாமல் திருப்தியற்ற நிலை ஏற்படும். இந்தத் திருப்தியின்மை தாம்பத்திய வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு வித்திடும்.
பார்க்க: female sexual arousal disorder - புணர்ச்சியின் / பாலுறவின் போது ஏற்படும் மந்தத் தன்மை, புணர்ச்சியின் / பாலுறவின் போது கிளர்ச்சியின்மை, பாலுணர்வு நாட்டமற்ற பெண், காமமின்மை, பெண்களின் பாலுணர்வுக் குறைபாடு - பாலுணர்வுத் தூண்டல், சீண்டல், தீவிரம் போதுமான கால அளவு இருப்பினும், உடலுறவின் போது திருப்திகரமான உராய்வு அனுபவத்தையோ, உற்சாகத்தையோ, பரவச நிலையையோ அடைய இயலாமை. இது தம்பதிகளுக்கிடையே மணவாழ்க்கையில் அதிருப்தியைத் தரும் காரணமாகி விடும். பாலுறவு மந்தத்தன்மை எப்போதுமிருப்பதா? குறிப்பிட்ட சூழலில் மட்டும் உருவாவதா? உளவியல் காரணங்களால் வருவதா? இல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களால் உருவாவதா? போன்றவற்றை அறிந்து கொண்ட பின்பே சிகிச்சையளிக்கப்படும்.
male erectile disorder - ஆண்குறி விறைப்பாக முடியாக் கோளாறு, ஆண்குறி ஓங்கல் பிசகு - உடலுறவின் போது சிலநேரங்களில் விறைப்புத் தன்மை ஏற்படாதிருப்பது இயல்பென்றாலும், அதுவே அடிக்கடி ஏற்படுகிறதென்றால் விறைப்புத் தன்மையில் கோளாறு உள்ளதாக அர்த்தம். இந்தக் கோளாறு சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கலாம். எப்போதாவது என்றால் அது சிறியது. உடல் உறவில் ஈடுபடும் போதெல்லாம் விறைப்புத் தன்மை ஏற்படவில்லையென்றால் அது தீவிரமான கோளாறு. அவர்களால் தாம்பத்ய உறவில் முழுமையாக திருப்தியுடன் ஈடுபட முடியாது. விறைப்புத் தன்மை கோளாறு வயதானவர்களுக்கு ஏற்படுவது சகஜம். 65 வயதில் 50 சதவீதம் பேருக்கும், 80 வயதில் 75 சதவீதம் பேருக்கும் விறைப்புத் தன்மையில் கோளாறு இருக்கும். விறைப்புத் தன்மை ஏற்படுவதற்கு ஆணுறுப்பில் போதுமான அளவு ரத்த ஓட்டம் தேவை. சர்க்கரை நோய், ரத்தம் உறைதல், ரத்த நாளங்களில் அறுவை சிகிச்சை செய்திருத்தல் போன்ற காரணங்களால் ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் போதுமான அளவு கிடைக்காமலிருந்தால் இக்கோளாறு தோன்றும். ப்ரோஸ்டேட் அறுவை சிகிச்சை போன்றவற்றால் நரம்பு சேதமடைந்திருந்தாலும் ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படாது. நரம்புக் கோளாறுகள், முதுகு எலும்பு நோய், ஸ்ட்ரோக், ஆல்கஹால், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைவு, சக்தி குறைவு, சோர்வு போன்றவையும் விறைப்பு ஏற்படாமல் போவதற்குக் காரணங்கள். நிறைய மருந்துகளும் ஆணுறுப்பு விறைப்பு அடையாமல் போவதற்குக் காரணம். குறிப்பாக வயதானவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகம். ஆன்டிஹைப்பர்டென்சிவ் (antihypertensives), ஆன்டிடிப்ரஸ்ஸன்ட்ஸ் (antidepressants), செடடிவ்ஸ் (sedatives), சிமெடிடைன் (cimetidine), டைகோக்ஸின் (digoxin), லித்தியம் (lithium), ஆன்டிசைக்கோடிக்ஸ் (antipsychotics) போன்ற மருந்துகள் ஆணுறுப்பு விறைப்பின்மைக்குக் காரணமாக உள்ளன. மன அழுத்தம், உடலுறவில் சரியாக செயல்படாமல் போய்விடுவோமோ என்ற கவலை, பயம், குற்ற உணர்வு, செக்ஸ் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் ஆகியவையும் விறைப்புத்தன்மைக் கோளாறுக்கான உளவியல் காரணங்களாக சொல்லப்படுகிறது. இவற்றுக்கு உதாரணமாக இளம் வயதினருக்கு உள்ள மன அழுத்தமிக்க சூழ்நிலை, தம்பதிகளிடையே புரிதலின்மை, வேலையில்லாப் பிரச்னை ஆகியவனவும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

English
The sexual disorders characterized by the recurrent and persistent inability to complete satisfactorily all phases of the sexual response cycle, causing marked distress or interpersonal difficulty. See female sexual arousal disorder and male erectile disorder.