sexual assault
பாலியல் தாக்குதல், பாலியல் வன்முறை
தமிழ் விளக்கம்
ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக, சட்டவிரோதமான பாலியல் செயல்களில் ஈடுபட பலாத்காரம் செயவது அல்லது கட்டாயப்படுத்துவது பாலியல் வன்முறை எனப்படும். ஒருவரின் மனமிசையாமல் அவரைப் பாலியல் செயல்களுக்கு வற்புறுத்துவதும், ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாக அவரின் அங்கங்களைத் தொடுவதும் பாலியல் வன்முறை / பலாத்காரமாகும். கற்பழிப்பு என்பது பாலியல் பலாத்காரத்தின் உச்சகட்டம். அது ஆண்குறியை பெண்ணின் உடலில் (வாய், குதம்) ஏதாவதொரு வகையில் உட்செலுத்துவதைக் குறிக்கும். கற்பழிப்பு, மாற்றுப்பாலினத்தவரின் உடலை இச்சையோடு தடவுவது, கட்டாயப்படுத்தி முத்தமிடுவது, பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாயப் பாலியல் தொழில் செய்ய வைப்பது, வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு, மாற்றுப்பாலினத்தவரை காமத்துடன் பார்ப்பது போன்ற செயல்களெல்லாம் பாலியல் பலாத்காரங்களே. ஒரு பெண் அல்லது ஆண், குடும்பம் விரும்பாத ஒருவருடன் காதல் அல்லது உடலுறவு கொண்டார் என்பதற்காக அவர்களைக் கொடுமைப்படுத்துவதும், அவரின் மனித உரிமைகளில் தலையிடுவதும் கூட ஒரு வகைப் பாலியல் பலாத்காரமே. பாலியல் பலாத்காரத்தில் வன்கலவியே மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. வன்கலவி தொடர்பான சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. சில நாடுகள் எல்லாவகையான பாலியல் பலாத்காரங்களையும், பாலியல் வன்முறை என வரையறுக்கின்றன. பெரும்பாலும் பெண்களே பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுபவர்களாக உள்ளனர். ஆண் - ஆண் வன்கலவியும் நடைபெறுவதுண்டு. பொதுவாக உலக அளவில் ஆண்களே பாலியல் பலாத்காரத்தில் அதிகமாக ஈடுபடுகிறார்கள்.
English
Nonconsensual, illegal sexual misconduct. Many writers use the term interchangeably with rape; others suggest that rape implies a more serious offense involving penile penetration, whereas sexual assault also includes rape, attempted rape, sexual molestation, sexual coercion, criminal sexual exposure, voyeurism, and frotteurism. The legal definitions of rape and sexual assault vary by jurisdiction.