sexual assault survivor group (SASG)

பாலியல் தாக்குதலிலிருந்து மீண்டவர் குழு

தமிழ் விளக்கம்

பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டப் பெண்களுக்கு உதவ ஏற்படுத்தப்பட்ட காலவரையறைக்குட்பட்ட குழுக்கள். 6 அல்லது 8 உறுப்பினர்களைக்கொண்டு, மருத்துவரின் வழிகாட்டுதலில், வாரம் 90 நிமிடங்கள் என்று 12 வாரத்திற்குக் கூடி, பாலியல் பலாத்காரத்தின் பல்வேறு தன்மைகளைப் பற்றி அலசும் குழுக்கள்.
பார்க்க: rape victims - கற்பழிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையங்கள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கான உதவி மையங்கள் - பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கும், வன்கொடுமைக்குள்ளாகும் வாய்ப்புள்ளவர்களுக்கும், பாலியல் வன்கொடுமையைத் தடுக்கவும், அதன் விளைவுகளைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வசதிகள். இந்த மையங்கள் பெரும்பாலும் இலாப நோக்கின்றி செயல்படும் சேவை நிறுவனங்களாகவோ, மருத்துவ மையங்களாகவோ அல்லது காவல் துறையுடன் இணைந்த வசதிகளாகவோ இருக்கும். இந்த மையங்கள் திறத்தொழிலினாராலும், பயிற்சி பெற்ற தன்னார்வத் தொண்டர்களாலும் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாயும், அதிர்ச்சியிலிருந்து மீள ஆலோசனை வழங்கியும், அவசரகால மருத்துவ உதவி போன்ற சேவைகளையும் செய்கிறது.

English

A form of time-limited group therapy for women who have been victims of sexual assault. SASGs typically consist of six to eight women led by two female clinicians. The group meetings last 90 minutes per week for 12 weeks and focus on themes related specifically to sexual assault issues.