sexual aversion disorder

பாலியல் வெறுப்புக் கோளாறு, பாலியல் விராகக் கோளாறு, பாலியல் சுகுச்சைக் கோளாறு

தமிழ் விளக்கம்

பாலியல் தொடர்புகளில் சம்பந்தப்பட்டவர்கள் அதிருப்திகொள்ளும்படியும், உறவுகளில் சிக்கல் ஏற்படும்படியும் பாலுறவில் நாட்டமில்லாமல், குறிப்பாக பிறப்புறுப்புகளின் மூலம் கொள்ளும் உடலுறவில் ஆர்வமில்லாமலோ அல்லது அதைத் தவிர்க்கும் மனநிலையிலோ இருக்கும் நிலை. உடனிருப்பவர் விருப்புடன் இருந்தாலும் உடலுறவு கொள்ளும்படியான சூழ்நிலையில் பயம், பதட்டம் காரணமாக உடலுறவைத் தவிர்ப்பது அல்லது அதில் போதுமான ஆர்வத்துடன் பங்கேற்காமல் இருக்கும் நிலை. இதை குறைமுனைப்புள்ள பாலியல் விருப்பச் சீர்கேடு (Hypoactive sexual desire disorder - HSDD) என்றும் தடைப்பட்ட பாலியல் இச்சை (inhibited sexual desire - ISD) என்றும் கூறுவதுண்டு. இது ஆண்களிடம் தென்படும்போது குறைமுனைப்புள்ள பாலியல் விருப்பச் சீர்கேடுள்ள ஆண் என்றும் பெண்களிடம் தென்படும்போது பாலுணர்வு நாட்டமாற்ற பெண், காமமற்ற பெண் (female sexual interest/arousal disorder) எனவும் குறிப்பர்.

English

A sexual disorder characterized by active avoidance of and aversion to genital sexual contact with a sexual partner, causing marked distress or interpersonal difficulty. Individuals experience varying degrees of fear, disgust, or anxiety when in sexual situations, ranging from lack of pleasure to severe distress.