sexual desire disorders

பாலியல் விருப்பக் கோளாறுகள்

தமிழ் விளக்கம்

பாலியல் தொடர்புகளில் சம்பந்தப்பட்டவர்கள் அதிருப்தி கொள்ளும்படியும், உறவுகளில் சிக்கல் ஏற்படும்படியும் பாலுறவில் நாட்டமில்லாமல், அதைப் பற்றிய கற்பனைகள் ஏதுமில்லாமல், குறிப்பாகப் பிறப்புறுப்புகளின் மூலம் கொள்ளும் உடலுறவில் ஆர்வமில்லாமலோ அல்லது அதைத் தவிர்க்கும் மனநிலையிலோ இருக்கும் நிலை. பாலியல் விருப்பக் கோளாறுகள் முனைப்பற்ற பாலியல் விருப்பக்கோளாறு, காமமின்மை, பாலுறவு வெறுப்புக் கோளாறு என்று பலவகைப்படும்.

English

Absence of fantasy or desire for sexual activity leading to marked distress or interpersonal difficulty. The major types of sexual desire disorders include hypoactive sexual desire disorder and sexual aversion disorder. See also sexual arousal disorder.