sexual development

பாலியல் வளர்ச்சி

தமிழ் விளக்கம்

மானுட இனப்பெருக்கச் செயல்பாட்டோடு தொடர்புடைய உடற்கூறியல், இயக்குநீர் உற்பத்தி (அகச்சுரப்பிகளின் வளர்ச்சி), உடற்றொழிலியல், அறிவாற்றல், உணர்வுகள் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களையே பாலியல் வளர்ச்சி என்கிறோம். பாலியல் வளர்ச்சி பொதுவாக கருத்தரிக்கும் போதே தொடங்கி விடுகிறது. பெண்ணின் கருமுட்டையுடன் சேரும் ஆணின் விந்துவில் உள்ள இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் (குரோமோசோம்) என்ற ஆண் நிறப்புரிகள், கருமுட்டையிலுள்ள பெண் நிறப்புரிகளுடன் இணையும் போதே கருவில் பாலினத் தன்மை உறுதி செய்யப்பட்டு, ஆணாகவும் பெண்ணாகவும் பல நிலைகளைக் கடந்து மரணம் வரை பல்வேறு பருவங்களாகத் தொடர்கிறது. இதை பிராய்ட் என்னும் உளமருத்துவர் வகைப்படுத்திய தன்மை பரவலாக மேற்கோள் காட்டப்படுகிறாது. மனிதப் பாலியல் வளர்ச்சி அல்லது மனித உள்விசை ஆறு நிலைகளில் வளர்ந்து முதிர்ச்சி பெறுவதாக பிராய்டின் அனுமானம். வாய்வழிப் பருவம் அல்லது சப்பும் பருவம் (oral phase - up to age two), குதப்பருவம் அல்லது ஆசனவாய்ப்பருவம் (anal phase - ages two to three), குறியின்பப் பருவம் (phallic phase or oedipal stage - ages three to seven), கண்ணயர்வுப் பருவம் அல்லது மொட்டவிழாப் பருவம் (latency stage - from age seven to puberty), இனப்பெருக்கப் பருவம் (genital stage - adolescence) என்று ஆறுநிலைகளில் பாலுணர்வு மிக்க உடற்பகுதி (erogenous zones) மாறுவதாக விளக்குகிறது. ஒவ்வொரு பருவத்திலும் அதற்கென்றே இருக்கும் உள்விசை நிறைவு பெற்று, மனநிறைவுடன் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டுமென்றும், அப்படி நிறைவுறாத பட்சம், அது வளர்ந்த பின் உள்ளார்ந்த முரண்பாடுகளை உருவாக்கி, உள்ளம் மற்றும் உணர்வு ரீதியான பிரச்சனைகளுக்கு வித்திடும் என்றும் இக்கோட்பாடு எடுத்துரைக்கின்றது. .

English

Anatomical, hormonal, physiological, cognitive, emotional, and social changes in an individual that are related to the reproductive function of life. Sexual development begins at conception, when the egg is fertilized by a sperm cell that carries either an XX (female) or an XY (male) sex chromosome. Sexual development continues through puberty and menopause and ends only at death. See also psychosexual development theory.