sexual deviation

பாலியல் பிறழ்ச்சி

தமிழ் விளக்கம்

உயிரியல் ரீதியாக இயல்பற்ற, ஒழுக்க ரீதியாகத் தவறான, சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட பாலியல் செயல்பாடுகள், எ.கா. மிருகப் புணர்ச்சி, குழந்தைகள் மீதான பாலியல் இச்சை
பார்க்க: paraphilia -.இயல்பற்ற சிற்றின்ப நாட்டம், பிறழ்காமம் - அசாதாரண கற்பனை, விநோதமான செயல்பாடுகள், ஜடப் பொருட்கள், உடைகள், காலணிகள், மயிர் கற்றை போன்ற உயிரிலாப் பொருட்களால் இயற்கைக்குப் புறம்பாகத் தூண்டப்படும் பாலியல் இச்சை. பாலியல் ரீதியாக பிறரைத் துன்புறுத்துவது அல்லது தானே துன்புறுவது, அவமானப்படுத்தப்படுவது, இச்சைக்கு இணங்காதவர்களை கட்டாயப்படுத்துவது போன்ற விநோதமான கற்பனையில் உருவாகும் இயல்பற்ற இந்தப் பாலுணர்வுத் தூண்டலில், உயிரில்லாப் பொருள்களை வைத்து பாலுறவு கொள்வது (fetishism), மாற்றுப்பால் உடையணிந்து மகிழல், குழந்தைகளால் பாலுணர்வு தூண்டப்படுவது (pedophilia), இன உறுப்பக்காட்டி மகிழ்தல், உடலக் காட்டி மகிழ்தல் (exhibitionism), மாற்றுபாலினரின் அங்கங்களை (உடலை) விருப்பத்துடன் நோக்குதல் (voyeurism), கைமுட்டு / சுயஇன்பப் பழக்கம் உடையவர் (frotteurism), அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை (sexual masochism), துன்புறுத்தி பாலின்பம் பெறுபதல் (sexual sadism) போன்ற செயல்கள் அடங்கும்.

English

See paraphilia.