sexual dysfunction
புணர்ச்சிப் பிசகு, பாலியல் திறனிழப்பு
தமிழ் விளக்கம்
ஒரு தனி நபரோ அல்லது தம்பதிகளோ உடலுறவில் திருப்தி அடைய முடியாத நிலை. இந்தச் செயலிழப்பு, புணர்ச்சியின் போது அடையாளப்படுத்தப்பட்ட நான்கு நிலைகளில் 1. உணர்ச்சியூக்க நிலை (excitement), 2. புணர்ச்சியில் நிலைபெறல் (plateau), 3. பாலின்பப் பரவசம் (orgasm), 4. தளர்வு நிலை (resolution) போன்ற எந்த நிலையிலும் வெளிப்படையாக உணரும்படி இருக்கலாம் அல்லது இயல்பான உடலுறவில் கூட மனதளவில் திருப்தியற்றதாக அமையலாம். இது உடலியல் (நோய், காயங்கள், அல்லது மருந்துகளின் பக்க விளைவுகள்) அல்லது உளவியல் காரணங்களால் ஏற்படலாம். இது புணர்ச்சிப் பரவச நிலை அடைய இயலாமை, யோனி இறுக்கம், புணர்ச்சியின் போது ஏற்படும் வலி, ஆண்குறி ஓங்கல் பிசகு, துரித ஸ்கலிதம், விந்து பீய்ச்சல் தடை / விந்து நிரோதம், பாலுறவு வெறுப்பு மற்றும் இயல்பற்ற உடலுறவு என்று பல வகைப்படும்.
English
The inability of an individual or couple to experience sexual intercourse in a satisfactory way. The dysfunction refers to both objectively occurring deficits in an individual's sexual response cycle (in any part of the cycle including excitement, plateau, orgasm, and resolution) and to an individual's subjective dissatisfaction with his or her sexual response, even if it falls within the normal range. The cause of the dysfunction may be psychosocial or physical (including effects of disease, injuries, or medications) or a combination of both. The most prevalent types include orgasmic disorders, vaginismus, dyspareunia, erectile disorder, premature ejaculation, ejaculatory inhibition, sexual aversion disorder, and paraphilia.