sexual harassment

பாலியல் தொந்தரவு / உபத்திரவம் / உலைச்சல் / இடைஞ்சல்

தமிழ் விளக்கம்

பால், பாலினம் அல்லது பாலியல் போக்கு என்பன காரணமாக ஒருவருக்குப் கொடுக்கப்படும் உபவத்திரவம். ஒரு குறிப்பிட்ட பாலினத்தவர் வருந்தும்படியாகவோ அல்லது சங்கடப்படும்படியாகவோ கருத்து சொல்வது அல்லது நடந்துகொள்வதைப் பாலியல் தொந்தரவு எனலாம். பாலியல், பாலின அடிப்படையிலான தொந்தரவு என்பது பாலின பாகுபாட்டின் வெளிப்பாடாகும். இது பல நாடுகளில் சட்ட விரோதமானது.. பாலினத் தொந்தரவு ஒருவரது கௌரவத்தைப் பாதிக்கலாம், பாதுகாப்பற்றவர்களாக அவர்களை உணரச் செய்யலாம், தமது முழு உள்ளார்ந்த ஆற்றலை எய்துவதிலிருந்து அவர்களைத் தடுக்கலாம். பெரும்பாலும், அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் இத்தொந்தரவைச் செய்கிறார். ஆனால் சகபாடிகள், சகபணியாட்கள் போன்றோரிடமிருந்தும் பாலினத் தொந்தரவு ஏற்படக்கூடும். இதற்குப் பெருமளவில் பலியாகக்கூடியவர்கள் பெண்கள். அவர்கள் பொதுவாகக் குறைந்த கூலியும், குறைந்த அந்தஸ்தையும் உடைய வேலைகளில் இருப்பதுடன், அனேகமாக குடும்பத்திற்காக வருமானமீட்டும் நிலையில் இருப்பதும் இதற்குக் காரணமாகும். உயர் அதிகாரத்தில் இருக்கும் பெண்கள்கூட பாலியல் தொந்தரவுக்கு இரையாகலாம். பாலியல் தொந்தரவு அல்லது இம்சை பல வழிகளில் வெளிப்படும். அவையாவன - பாலியல் கேலிகளைச் சொல்லுதல், பாலியல் வல்லமைகள் பற்றிப் பெருமையடித்தல், பால் அல்லது பாலின அடிப்படையிலான அடாவடித்தனம் செய்தல், பாலியல் கட்டுக்கதைகளை அல்லது வம்புப் பேச்சுக்களைப் பரப்புதல் (இணையத்தளம் உட்பட), ஆபாசப் படைப்புகள், பாலியற் படங்கள், கேலிச் சித்திரங்கள், சுவர்ப்படங்கள் அல்லது பாலியல் உருவங்கள் (இணையத்தளம் உட்பட) ஆகியவற்றை இடுதல் அல்லது பகிர்தல், ஒருவரது உடலியல் தோற்றம் குறித்துக் கருத்துரைத்தல் (உதாரணமாக – கவர்ச்சியானவர்களை ஐட்டம் / பிகர் என்பது), வேண்டாத தொடுகை உட்பட தேவையற்ற உடலியல் தொடர்புகளைச் செய்தல், நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கூட பாலியல் அத்துமீறலை பொறுத்துக் கொள்ளச் செய்தல் போன்ற நடத்தைகள் பாலியல் தொந்தரவில் அடங்கும்.

English

Abusive and unfavorable treatment or sex discrimination of a person because of his or her gender. Such treatment typically includes making lewd gestures and propositions, touching someone who does not want to be touched, or seeking to exchange sexual favors for employment opportunities. Sexual harassment is against the law in the United States and many other nations, and employers in those countries are required to provide workplaces that are free from it. See also harassment.