sexual identity

பாலியல் அடையாளம்

தமிழ் விளக்கம்

பாலியல் அடையாளம், என்பது ஒருவர் தன்னுணர்வுடன் ஆண் அல்லது பெண்ணாக எவ்வளவு தூரம் தன் நடத்தை, ஆளுமை, உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதோடு தொடர்புடையது. ஒருவருடைய பாலின அடையாளம் பாலியல் போக்கிலிருந்து (gender identity) வேறுபட்டது. மனிதர்களுடைய பாலின அடையாளம் அவர்களுடைய பிறப்பினால் வழங்கப்பட்ட பாலிலிருந்து வேறுபடலாம். மாற்றுப்பாலியலாளர் (transsexual) மாற்றுப்பாலினத்தவர் (transgender), இருபாலியலாளர்கள் (intersex persons), மாற்றுப்பாலின உடையாளர்கள் (cross-dressers), பிறப்பால் அடையாளப்படுத்தப்பட்ட பாலிலிருந்து வேறுபட்டும் அல்லது வேறுபட்டதாக காணப்பட்டும் இருக்கும் ஏனையோர் போன்ற அனைவரையும் இதில் உள்ளடக்கலாம்.
பார்க்க: மாற்றுப்பாலினர் (Transgender): ஒன்றுக்கு மேற்பட்ட பாலின வாழ்க்கை அனுபவம் உள்ளவர்கள். இது, தங்களை மாற்றுப் பாலியலாளராக இனம் காண்போர், பாலினப் பல்வகை வேறுபாட்டுக்குள் (gender spectrum) இருப்போர் எனத் தம்மை விபரிப்பவர்கள் அதாவது பெண் அல்லது ஆண் என்ற பிரிவுக்கு வெளியில் வாழ்பவர்கள் போன்றோரை உள்ளடக்கலாம்.
மாற்றுப்பாலியலாளர் (Transsexual): பிறப்பில் ஒரு பாலினமாக அடையாளம் காணப்பட்டவர்கள், ஆனால் தங்களை வேறு பாலினமாக உணர்பவர்கள். இயக்குநீர் சிகிச்சையாலோ (hormone therapy), அறுவைச் சிகிச்சை மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது செய்முறைகளுடாக தாங்களால் உணரப்பட்ட அடையாளத்துக்குத் தக்கதாக தங்களுடைய உடல்களை சீரமைக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகளைத் தேடுவார்கள் அல்லது சிகிச்சைகளுக்கு உட்படுபவர்கள்
இருபாலியலாளர் (Intersex): பிறப்பின் போதோ அல்லது பருவமடைந்த பின்போ, அவர்களுடைய உடல் சிறப்பியல்புகளிலிருந்து, ஆண் அல்லது பெண் என இலகுவில் பாகுபடுத்தமுடியாதோர். இந்தச் சொல் அலி (hermaphrodite) என்னும் பொருந்தாத சொல்லைப் பிரதியீடு செய்கிறது.
மாற்றுப்பாலின உடை உடுப்பவர் (Crossdresser): தனது உணர்வுரீதியான, உளவியல்ரீதியான சேமநிலைகளுக்காக, எதிர் பாலினருடன் பொதுவாகத் தொடர்புடைய உடைகளை அணிபவர்.
மாற்று (Trans): ஒரு பெண் அல்லது ஆண் என்ற பொதுவான சமுதாய வரைவிலக்கணத்துக்குள் அடங்காமல் வேறுபட்ட அளவீட்டில் இருக்கும் தனியாட்களை விபரிக்கும் ஒரு பதம் இது.

English

The degree to which an individual takes on the behaviors, personality patterns, and attitudes that are usually associated with male or female sex roles. This is a synonym for gender identity.