sexual masochism
கொடுஞ்செயல் புரிந்து பாலின்பம் பெறல், அடக்கிக் கொடுமை செய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை, வலிநுகர் மகிழ்வு, வலிதூண்டி அல்லது வலிதாங்கிப் பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு, அஞரின்பம், வலியேற்பு வெறி, மசோக்கியம்
தமிழ் விளக்கம்
Masochism என்றால் வலியேற்பு வெறி அல்லது அடக்கிக் கொடுமை செய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்ப நிலை. Sadism என்றால் துன்பூட்டுவேட்கை, தாக்கின்பம், சித்திரவதை செய்வதில் இன்பம் பெறுபவர். இரண்டும் ஒரே செயலின் இருபக்கங்கள். Sexual Masochism என்றால், தனியாகவோ, உடலுறவில் பங்கெடுக்கும் இருவரில் ஒருவரோ அல்லது பலரில் ஒருவரோ, இயல்பான சிற்றின்ப மகிழ்ச்சியடைதலை விட, உடலுறவின் போது வலிஏற்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கட்டிவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு உடலுறவு கொள்ளப்படுவதில் மகிழ்ச்சியடையும் பண்பு. வலியைத் தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு. sexual sadism என்றால் உடலுறவின் போது, உடலுறவில் ஈடுபடும் பிறிதொருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக வலியை ஏற்படுத்தி, அவமானப்படுத்தி, காயமாகுமளவு தாக்குவதன் மூலம் சிற்றின்ப மகிழ்ச்சி அடையும் பண்பு. அதாவது பிறரைத் துன்புறுத்தி பாலின்பம் பெரும் மனநோய். இந்த இரண்டு வகைகளும் இயல்பற்ற காம நுகர்வு (paraphilia) வகையைச் சார்ந்தது.
English
The act of deriving erotic excitement or arousal by being subjected to pain, humiliation, or suffering. Excitement occurs by the actual, not fantasized, experience of being bound, tortured, or beaten.