sexual orientation
பாலியல்பு, பாலியல் நாட்டம், பாலியல் சார்புத்தன்மை, பாலியல் பழக்கம்
தமிழ் விளக்கம்
பாலியல் நாட்டம் (sexual orientation) என்பது ஒருவர் யாருடன் நீடித்த உணர்வுபூர்வமான, பாலியல் நோக்கிலான ஈர்ப்புக் கொள்கிறார்கள் அல்லது காதல் வயப்படுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. மூன்று முக்கிய காரணிகள் பாலியல் நாட்டத்தைக் கட்டமைக்கின்றன. 1. ஒருவர் எந்தப் பாலினத்தால் கவரப்படுகிறார் அல்லது ஈர்க்கப்படுகிறார் 2. ஒருவர் பாலியல் செய்கைகளில் எப்படி நடந்துகொள்கிறார் 3. ஒருவர் தன்னை எந்தப் பால் தன்மையாளராக அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது. தன்பால் ஈர்ப்பாளர்கள், எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே பலவிதமான பாலியல் அடையாளங்கள், பாலியல் ஈர்ப்புக்கள் மற்றும் நடத்தைகள் உள்ளன. தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் எதிர்பால் ஈர்ப்பாளர்களும் இடையே ஐந்து வகையான பாலியல் நாட்டங்கள் இருக்கின்றன. கருப்பு அல்லது வெள்ளை என்பது போல் தன்பால் ஈர்ப்பு உடையவர்கள் அல்லது எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள் என்று மேலோட்டமாகப் பிரிக்கமுடியாது. கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே பல வண்ணங்கள் (நிறப்பிரிகை) இருப்பது போல், தன்பால் ஈர்ப்பாளர்கள் எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சிலர் இருக்கிறார்கள் அந்த அடையாளங்களாவன 1. தன்பால் ஈர்ப்பற்ற எதிர்பால் ஈர்ப்புடையவர்கள், 2. பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் அரிதாக தன்பால் ஈர்ப்புடையவர்கள், 3. பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் ஓரளவு தன்பால் ஈர்ப்பு உடையவர்கள், 4. தன்பால் மேலும் எதிர்பால் மேலும் சம அளவில் ஈர்ப்புடையவர்கள், 5. பெரும்பாலும் தன்பால் ஈர்ப்புடையவர்கள் அரிதாக எதிர்பால் ஈர்ப்புடையவர்கள், 6. பெரும்பாலும் தன்பால் ஈர்ப்புடையவர்கள் ஓரளவு எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள், 7. எதிர்பால் ஈர்ப்பற்ற தன்பால் ஈர்ப்பு உடையவர்கள், 8. எந்தப் பாலியல் நாட்டமும் இல்லாதவர்கள். பாலியல் நாட்டம் என்பது பல்வேறு பாலின அடையாளங்களோடு ஒரு தொடர்மத்தில் அமைகிறது. பொதுவாக எதிர்பால் நாட்டம், தற்பால் நாட்டம், இருபால் நாட்டம், நாட்டம் தொடர்பாக தெளிவற்ற நிலை, நாட்டம் இன்மை என்று வகைப்படுத்தப்பட்டு கருத்தாடப்படுகின்றன.
English
Inclination toward or preference for sexual activity with members of one's own sex (homosexual orientation), the opposite sex (heterosexual orientation), or both (bisexual orientation).Three components of sexual orientation are attraction, behavior, and identity. Attraction may be to partners of the same or opposite sex or, rarely, to partners of both sexes. Behavior refers to sexual activities with partners of the same or opposite sex. Identity refers to one's view of oneself as heterosexual (primarily attracted to opposite-sex partners), homosexual (primarily attracted to same-sex partners), or bisexual (equally attracted to partners of both sexes).