sexual pain disorder
புணர்வலி, உடலுறவின் போது ஏற்படும் வலி, வலிமிகுப் புணர்ச்சி, புணர்ச்சிச் சிக்கல்
தமிழ் விளக்கம்
மருத்துவ மொழியில் இதை dyspareunia என்பர். இது மோசமான (dys) படுக்கைத் தோழன் (bedfellow) இணை (mate) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. உடலுறவின் போது மருத்துவ அல்லது மனரீதியான காரணங்களால் வலியை உணர்வார்கள். இந்த அறிகுறி ஆண்களை விடப் பெண்களிடத்தில் அதிகமாக, ஐந்தில் ஒருவருக்கு ஏற்படும். இந்த வலியின் காரணத்தை அறிந்துகொண்டால் அதிலிருந்து விடுபடமுடியும்.
உடலுறவைப் பொறுத்தவரை பெண்களுக்கென சில பிரத்யேகப் பிரச்சினைகள் உண்டு. உடலுறவின் போது பெண்ணுறுப்பில் வலி தோன்றுவது ஒரு முக்கியப் பிரச்சினை. இது வெஜினிஸ்மஸ் எனப்படுகிறது. குறிப்பாகப் பெண் உறுப்பிற்குள் ஆணுறுப்பை நுழைக்கும் போது இந்த வலி தோன்றுகிறது. இதற்கு வயது வித்தியாசம் என எதுவும் கிடையாது. கன்னிப் பெண்களாக இருந்தாலும் சரி வயதான பெண்களாக இருந்தாலும் சரி இந்த வலி வரலாம். முதன் முதலில் கன்னித்திரை கிழிபடும் முன் உண்டாகும் வலி வேறு, இந்த வலி வேறு. 2 முதல் 3 சதவிகிதப் பெண்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட பெண்களுக்கு பெண்ணுறுப்பின் உள்ளே ஒரு விரலைக்கூட நுழைக்க முடியாத அளவுக்கு உறுப்பின் உட்சுவர் குறுகி விடுகிறது. ஆண் எவ்வளவு மென்மையாகக் கையாண்டாலும் தாங்க முடியாத வலி உண்டாகுமே தவிர பெண்ணால் எந்தவித இன்பத்தையும் நுகர முடியாது. இத்தகைய பெண்களுக்கு உடலுறவு என்றாலே கடும் அலர்ஜி. இதனால் ஆண் வர்க்கத்தையே கூட ஒட்டு மொத்தமாக சில பெண்கள் வெறுக்கக் கூடும். இதுவே முற்றினால் செக்ஸ் விஷயத்தில் அடி மனதில் ஆறாத் தழும்பாக உருவெடுத்து உருக்குலைக்கக் கூடும். உடலுறவில் இயற்கையான ஆசைகள் இருந்த போதிலும், அதன் போது ஏற்படும் கொடூரமான வலி செக்ஸ் மீதே விருப்பம் இல்லாமல் செய்து விடும். இத்தகைய பெண்களுக்கு உடலுறவு கொள்வதை விட அதற்கு முன் செய்யப்படும் தொடுதல், தடவுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், வருடுதல், போன்ற முன் விளையாட்டுக்களே ரெம்பப் பிடிக்கும். இதனால் அடிக்கடி உடலுறவுக்கு வாய்ப்பே இன்றிப் போகிறது. அதனால் அந்தப் பெண்ணுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைந்து விடுகிறது. ஆனால் ஆணுக்கு இத்தகைய குறைபாடு பற்றி ஒன்றும் தெரியாத நிலையில், உடலுறவின் போது வலி தாங்காமல் துடிக்கும் மனைவியைப் பார்த்து, தான் ஏதோ பயங்கரமான பலசாலி அல்லது மிக வீரியமுள்ள ஆண்மகன் என்று தன்னைக் கற்பனை செய்து கொண்டு மேலும் மேலும் துன்புறுத்துவான். இறுதியில் இத்தகைய ஆண்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டு ஆண்மைக்குறைவு கூட ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

English
A sexual disorder in which the individual experiences unpleasantness or pain during some or all phases of the sexual response cycle. Also known as dyspareunia, the causes include infection, inflammation, after-effects of injury or surgery, and in women, endometriosis. Psychological distress including previous sexual trauma also can lead to this disorder.