sexual sadism
பாலியல் துன்பூட்டுவேட்கை, தாக்கின்பம், சித்திரவதை செய்வது சிற்றின்பம் பெறுபவர், கொடுமை செய்வது சிற்றின்பம் பெறுபவர், துன்புறுத்திப் பாலின்பம் பெறும் மனநோய், மற்றவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கி பாலின்பம் பெறுதல், கொடுவெறிக் காமம்
தமிழ் விளக்கம்
Sadism என்றால் துன்பூட்டுவேட்கை, தாக்கின்பம், சித்திரவதை செய்வதில் இன்பம் பெறுபவர். Masochism என்றால் வலியேற்பு வெறி அல்லது அடக்கிக் கொடுமை செய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் நிலை. இரண்டும் ஒரே செயலின் இருபக்கங்கள். sexual sadism என்றால் உடலுறவின் போது, உடலுறவில் ஈடுபடும் பிறிதொருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக வலியை ஏற்படுத்தி, அவமானப்படுத்தி, காயமாகுமளவு தாக்குவதன் மூலம் சிற்றினப மகிழ்ச்சி அடையும் பண்பு. அதாவது பிறரைத் துன்புறுத்தி பாலின்பம் பெரும் மனநோய். Sexual Masochism என்றால் உடலுறவில் பங்கெடுக்கும் இருவரில் ஒருவரோ அல்லது பலரில் ஒருவரோ, இயல்பான சிற்றின்ப மகிழ்ச்சியடைதலை விட, உடலுறவின் போது வலி ஏற்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கட்டிவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு உடலுறவு கொள்ளப்படுவதில் மகிழ்ச்சியடையும் பண்பு. வலியைத் தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு. இந்த இரண்டு வகைகளும் இயல்பற்ற காம நுகர்வு (paraphilia) வகையைச் சார்ந்தது.
English
The act of deriving erotic excitement or arousal by inflicting pain on others. Excitement occurs by subjecting a consenting or nonconsenting partner to humiliation and simulated or actual injury and suffering.