sexual trauma
பாலியல் அதிர்ச்சி, பாலியல் உணர்வதிர்ச்சி
தமிழ் விளக்கம்
ஒரு தனி நபரின் ஆளுமை மற்றும் மன ஆரோக்கியத்தில் நீடித்த தாக்கத்தைப் ஏற்படுத்தும் பாலியல் தொடர்பான அதிர வைக்கும் அனுபவம். அந்தச் சம்பவம் கற்பழிப்பாகவோ, முறையற்ற பாலுறவாகவோ, பாலியல் வன்கொடுமையாகவோ, உளப்பாலியல் கோளாறின் விளைவாகவோ ஏற்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவம் மறக்க முடியாததாகவோ, அவமானம் தரத் தரத்தக்கதாகவோ, பெரும் கவலைக்குள்ளாக்குவதாகவோ, அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தச் சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடியதாகவோ மற்றும் நெருக்கமான உறவுகளைப் பாதிப்பதாகவோ அமையலாம்.
English
A shocking experience involving sexuality that has a lasting effect on an individual's personality and mental health. The experience is usually rape, incest, sexual abuse, or exposure to a psychosexual disorder of others. The resulting symptoms of these experiences include inability to forget, flashback, anxiety, shame, posttraumatic stress disorder (PTSD), and difficulties in having intimate relationships.