shadow welfare state

காருண்ய நல அரசு, சமூகநல அரசு

தமிழ் விளக்கம்

மக்கள் செலுத்தும் வரியின் மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து செய்யப்படும், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன்படும் பலவிதமான சமூக சேவைகள். வருமானப் பராமரிப்பு, அல்லது வருமானப் பாதுகாப்புப் பயன்கள், வீட்டுக்கடன் வட்டிக்கான சலுகைகள், குழந்தைப் பராமரிப்பிற்கான உதவிகள், வணிகச் செயல்பாட்டிற்கான சலுகைகள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், விவசாயத்திற்கும் வியாபாரத்திற்குமென வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பல்வேறு மானியங்களைச் செயல்படுத்தும் அரசைக் காருண்ய நல அரசு எனலாம்.

English

Taxpayer-supported social services and income maintenance programs that primarily benefit the middle classes, typically through tax policies (such as deductions for home loan interest, child care costs, and business expenses), federal subsidies for agriculture and businesses, and social security pensions.