Shaftesbury, Lord (Anthony Ashley Cooper, 1801-1885)

ஷாஃப்டெஸ்புரி பிரபு (அந்தோணி ஆஷ்லே கூப்பர்) 1801-1885)

தமிழ் விளக்கம்

ஷாஃப்டெஸ்புரி பிரபு (அந்தோணி ஆஷ்லே கூப்பர்) 1801-1885) - ஏழை மற்றும் பள்ளி செல்ல வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கவும், அவர்களின் சமூக மேம்பாட்டிற்காகவும் பாடுபட்ட ஷாஃப்டெஸ்புரி பிரபு, 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் செயல்பட்ட முக்கியமான சமூகச் சீர்திருத்தவாதி. இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததால், இங்கிலாந்தில் வீட்டு வசதி மேம்பாட்டிற்கும், நோயுற்றவர்களுக்கும், மனநோயாளிகளின் பராமரிப்பிற்கும், ஏழைக்குழந்தைகளின் கல்விக்கும் மற்றும் குடிசைப்பகுதிகளின் மேம்பாடு தொடர்பான பல சட்டங்கள் இயற்றக் காரணமாயிருந்தார். தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான அமைப்பையும், இளம் ஆண்கள் கிருஸ்தவ அமைப்பை (Young Men's Christian Association (YMCA) ஏற்படுத்தவும் உதவியாயிருந்தார்.
பார்க்க: Ragged School Movement - ஏழைகளுக்கான / வலுவிழந்தவர்களுக்கான / வாய்ப்பற்றவர்களுக்கான பள்ளி இயக்கம் - ஏழை மற்றும் பள்ளி செல்ல வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கவும், அவர்களின் சமூக மேம்பாட்டிற்காகவும், ஷாஃப்டெஸ்புரி பிரபுவால் 1850 களில் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி இயக்கம். இது ஜான் பவுண்ட்ஸ் (John Pounds 1766-1839) என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியால் தொடங்கப்பட்டு ஷாஃப்டெஸ்புரி பிரபுவால் இங்கிலாந்து முழுதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தப் பள்ளிகள் தன்னார்வத் தொண்டர்களால் நிருவகிக்கப்பட்டு, கல்வி, சமூக சேவை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கியது. கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியான சாத்தியக்கூறுகள் இங்கிலாந்தில் அதிகரித்த பின், இந்த இயக்கம் ஏழை மற்றும் ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் குழந்தைகள், அவர்களின் குடும்பத்தினருக்கான சமூக நலச் சேவைகளை வழங்க ஆரம்பித்தது. வாய்ப்பற்றவர்களுக்கான பள்ளி இயக்கம், 1944 இல் ஷாஃப்டெஸ்புரி அறக்கட்டளையாக பெயர் மாற்றம் பெற்றது.

English

Founder of the Ragged School Movement and England's foremost social reformer in the 19th century. Through his work as a member of Parliament, he guided legislation that improved conditions in housing, physical and mental illness care, slums, and education for poor children. He also helped found the Society for Improving the Conditions of the Laboring Classes and the Young Men's Christian Association (YMCA).