shame
அவமானம், மானக்கேடு, நாணக்கேடு, குற்றவுணர்வால் ஏற்படும் புண்படுநிலை, அலர்தூற்றலுக்கு ஆட்படும் நிலை, உட்குணர்வு, குறைபாட்டினால் ஏற்படும் மன உளைவு, தாழ்வுணர்ச்சி, தகவுக்கேடான நடத்தையால் ஏற்படும் அவலநிலை, பங்கக்கேடு
தமிழ் விளக்கம்
ஒருவர் தன்னுடைய தற்போதைய நிலையையும், தான் அடைய விரும்பும் நிலையையும் ஒப்பிடுவதால் வரக்கூடிய வலிதரும் உணர்வு. அது செயலின் விளைவாகவோ அல்லது செயற்படாமல் இருப்பதாலோ நிகழலாம். குற்ற உணர்வு என்பது தவறாக நடந்ததால் ஏற்படுவது. தர்ம சங்கடம் என்பது தன் தவறை உணர்ந்து நாணமடைவது. அவமானம் என்பது தெரிந்தோ, தெரியாமலோ குற்றமிழைத்ததாலோ, குறைபாட்டைப் பற்றிய பிரக்ஞையாலோ, தவறான நடத்தையாலோ தனக்கோ, தன்னிடம் அன்பு கொண்டவர்களிடமோ தன்னிலை தாழ்வதாலும் அல்லது பிறரால் தாழ்த்தப்படுவதாலும் ஏற்படுகிற வலி உணர்வு. அவமானமும், அவமானத்தின் மூலமாக ஏற்படும் வலியின் அளவும், பெரும்பாலும் ஒருவர் எவ்வளவு தூரம் சமூகமயமாகியிருக்கின்றார் என்பதைப் பொறுத்தே அமையும்.
English
A painful feeling of having disgraced or dishonored oneself or those one cares about because of an intentional act, involuntary behavior, or circumstance.