shame versus autonomy

தயக்கமும், நானக்கேடும் vs சுயசெயற்பாடும்

தமிழ் விளக்கம்

2 - 4 வயதுள்ள குழந்தைகளின் தன்னியக்க / சுயாதீன நடவடிக்கைகளைக் கண்டிக்கும் போது ஏற்படும் உணர்வு - எரிக் எரிக்சனினால் முன்வைக்கப்பட்ட மனித வளர்ச்சியின் நிலைகளில் இரண்டாவது நிலையாகும். மனித வளர்ச்சி நிலைகளைப் பல்வேறு உளவியலாளரும் பல கோணங்களில் ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அறிவு வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பியாஜேயும், உளப்பகுப்பு நிலையினைக் அடிப்டையாகக் கொண்டு சிக்மண்ட் பிராய்டும், ஒழுக்க நிலையினைக் கருத்திற் கொண்டு கோல்பேர்க்கும், உள-சமூகவிருத்தி நிலையினைக் கொண்டு எரிக்சனும் விளக்கியுள்ளனர். எரிக்சனின் உள சமூகவிருத்தி நிலைகளாவன 1. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் - trust versus mistrust - Oral-sensory, Birth-2 years), 2. தன்னியக்கமும் (சுதந்திரமாக இயங்குதல்), தயக்கமும், நானக்கேடும் - autonomy versus shame and doubt -Muscular-Anal, 2-4 years), 3. முன்முயற்சியும் குற்ற உணர்வும் - initiative versus guilt Locomotor-Genital, Preschool, 4-5 years), 4. விடாமுயற்சியும் தாழ்மை உணர்வும் - industry versus inferiority Competence Latency, 5-12 years) 5. அதுவேயாந்தன்மை (தனித்துவமும் - தன்னைப் பற்றிய நிலையான கருத்து), கடமைக்கூற்று முரண்பாடு - identity versus role confusion Adolescence, 13-19 years குமரப் பருவம்), 6. நெருக்கமும், தனிமையும் - intimacy versus isolation Young adulthood, 20-24, or 20-39 years முன் முதிர்பருவம்), 7. பெருக்கப் பண்பும், தேங்கி நிற்றலும் - generativity versus stagnation Middle adulthood, 25-64, or 40-64 years நடுமுதிர் பருவம்),
8. இணக்கமும் விரக்தியும் (இணக்கமின்ன்மையும்) - integrity versus despair Late adulthood, 65-death பின் முதிர் பருவம்). இதில் இரண்டாம் நிலையே, தன்னியக்கமும் (சுதந்திரமாக இயங்குதல்), தயக்கமும், நானக்கேடும் (autonomy versus shame and doubt). இரண்டு வயது முதல் மூன்று வயது வரையுள்ள துள்ளு நடைப்பருவம் இதுவாகும். குழந்தைகள் அவரகளின் உடல்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கு ஆரம்பிப்பர். இக்காலப்பகுதியில் பொதுவாகவே அவர்கள் ஆடையணியும் பயிற்சியும் ஆரம்பமாகும். தான் ஒரு சுதந்திரமானவன் எனவும், ஆனால், முக்கியமான விடயங்களில் ஏனையோரின் உதவியினையும் வழிகாட்டலையும் தன்னால் பயன்படுத்த முடியுமெனவும் கருதுகின்ற உளநிலையைப் பிள்ளை பெற்றுவிடுகின்றது. உணவு உட்கொள்ளல், கழிவகற்றல் போன்றவற்றில் தானே ஈடுபடப் பிள்ளை எத்தனிக்கின்றது. அப்படி சுயமாகச் செய்து தவறிழைக்க நேரிடும்போது மற்றவர்களின் கண்டனத்திற்கும், ஏளனத்திற்கும் உட்படுவதால் வெட்கமும், தன் செயல்பாட்டின் மீது சந்தேகமும் கொள்கிறது.

English

The basic conflict found in the second stage of human psychosocial development, occurring between ages two and four, according to the psychosocial development theory of Erik Erikson (1902-1994). During this time, the toddler experiences social controls and discipline and is helped by the socialization process to achieve recognition of his or her uniqueness.