shantytowns
குடிசைப் பகுதிகள்
தமிழ் விளக்கம்
நகர்ப்புறங்களில், தங்களுக்கு உரிமையில்லாத இடங்களில், தூக்கியெறியப்பட்ட பழைய பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட குடிசைகளில், குறைந்த வருமானப்பிரிவினர் நெருக்கமாக, அடர்த்தியாக வாழும் குடியிருப்புப் பகுதிகள். தங்களுக்குச் சொந்தமல்லாத இடங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் குடியிருப்பதால், அவர்களால் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சுகாதார வசதிகள், பள்ளி வசதிகள், காவல் துறைப் பாதுகாப்பு போன்ற வசதிகளைக் கோரமுடியாது. இந்த மாதிரியான குடிசைப்பகுதிகள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகளின் நகர்ப்புறங்களில் மிக அதிக எண்ணிக்கையில் உருவாகி வருகின்றது.
பார்க்க: slum - சேரிப்பகுதிகள் - சிதிலமடைந்த, குடியிருக்கப் பாதுகாப்பற்ற, கைவிடப்பட்ட வீடுகளைக் கொண்ட, குறைந்த வருவாய்ப்பிரிவினர் வாழும் குடியிருப்புப் பகுதிகள்.
ghetto - சேரிப்பகுதி - நகரத்தில் பெரும்பான்மையான யூதர்கள் வாழும் பகுதி - குறைந்த வருவாய்ப் பிரிவினரோ, பாரபட்சத்தின் காரணமாக மத, இன, சமூக, கலாச்சார ரீதியாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நகர்ப்பகுதி.
barriadas - அமெரிக்காவில் குறைந்த வருமானமீட்டும் ஸ்பானீஷ் மக்களுக்கான குடியிருப்பைக் குறிக்கும் சொல்.

English
Densely populated settlements of impoverished people who have built homes of scrap materials on land they do not own. Because these people usually occupy the land illegally, they cannot demand public services and have little fire and police protection, water and sanitary facilities, or schools. Shantytowns are growing rapidly, especially in Third World nations, and are also found in more affluent nations that do not provide adequately for their poor populations. See also slum, ghetto, and barriadas.