shared psychotic disorder
பகிர்ந்துகொள்ளப்படும் உளப்பிணி கோளாறு
தமிழ் விளக்கம்
இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்டபவர்களோ தங்களுடைய புனைசுருட்டுகளையும், மனப்பிராந்திகளையும் பகிர்ந்துகொண்டு, தங்களின் மனமருட்சிகளை பரஸ்பரம் தூண்டிவிட்டுக்கொள்ளும் போக்கு.
பார்க்க : folie à deux - folie, madness உளக்கோளாறு + à, between + deux, two இருவருக்கிடையே ஏற்படும் ஒரே மாதிரியான மனக்கோளாறு - நெருக்கமான இருவர் மாயத்தோற்றங்களை நம்புவதும் / எண்ண மயக்கங்களுக்கு இரையாகும் மனக்கோளாறு (உ.ம். தங்களுடைய அண்டை வீட்டார் தங்களை ஏளனம் செய்கிறார்கள் என்று தம்பதியினர் நினைப்பது / தங்களுக்கு உறவினர்கள் செய்வினை செய்துவிட்டார்கள் என்று நினைப்பது இவ்வகைக் கோளாறில் அடங்கும்.
induced psychotic disorder - தூண்டப்பட்ட உளக்கோளாறு, பகிர்ந்துகொள்ளப்பட்ட உளப்பிணி - மன மருட்சி கொண்ட ஒருவருடனோ அல்லது பலருடனோ நெருக்கமாக உறவுகொண்டிருக்கும் சூழலின் விளைவாக ஏற்படும் / பகிர்ந்துகொள்ளப்படும் மன மருட்சி.
Conjugal paranoia - தமபதிகளில் யாரோ ஒருவர் தூரோகம் இழைப்பதாக / விசுவாசம் இல்லாததாக சந்தேகித்தல், தம்பதிகளுக்குள் ஏற்படும் சந்தேகத்தால் ஏற்படும் சித்தப் பிரமை.
Codependency - சார்பு நிலை, சார்ந்திருத்தல் - இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ தங்களின் ஆரோக்கியமற்ற உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உறவு முறை. உதாரணமாக ஒரு விதவைத்தாயும், அவருடைய மகளும் தாங்கள் பிறரால் உதாசீனப்படுத்தப்படலாம் அல்லது பரிகாசத்திற்குள்ளாகலாம் என்ற பயத்தினடிப்படையில் எப்போதும் உடனிருக்கும் நிலை. இது தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் நம்பிக்கையற்ற தன்மையால் எப்போதும் உடனிருக்கும் நிலை மாதிரியோ, ஒரே மாதிரியான கருத்துத் திரிபு பிணி கொண்டவர்களைப் போலவோ, அல்லது வெளித்தூண்டல்களால் உருவான மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்கள் சார்ந்திருப்பதைப் போன்றதல்ல.

English
A psychotic disorder in which two or more people experience in common delusions of persecution or other delusions. The disorder is exacerbated because each participant fuels the delusions of the other. See also codependency, folie a deux, conjugal paranoia, jealousy, and induced psychotic disorder.