sheltered-care facility

அடைக்கல இல்லங்கள்

தமிழ் விளக்கம்

சுயாதீனமாகச் செயல்பட முடியாதவர்களுக்கு, பாதுகாப்பான, கவனிப்பு வழங்கும் திட்டம் மற்றும் நிறுவனம். நலம் பேணகத்தில் அளிக்கப்படும் கவனிப்பு போன்று இருந்தாலும், நலம் பேணகத்தில் இருப்போருக்குத் தேவைப்படும் தீவிர மருத்துவக் கவனிப்பு தேவைப்படாது. இந்த மாதிரியான அடைக்கல இல்லங்கள் 24 மணிநேர தங்குமிட வசதியுடன் கூடிய கவனிப்பும், சில இல்லங்கள் பகல்நேரக் கவனிப்பும் வழங்குகிறது. இந்த மாதிரியான அடைக்கல இல்லங்களில் இருப்போர்களில் பெரும்பாலோர் மன நோயாளிகளாகவோ, உடல் ஊனமுற்றவர்களாகவோ அல்லது நோயற்ற ஆனால் பலவீனமான முதியோர்களாகவோ இருப்பார்கள்.

English

A program and agency that provides a protected and monitored environment for those unable to function independently. These facilities are similar to nursing homes, except their residents usually do not require such intensive health care services. Most are 24 hour residential centers, but others provide only day care. Many facility residents have mental illnesses or physical disabilities or are relatively healthy frail elderly people.