Sheppard-Towner Act

ஷெப்பர்ட்

தமிழ் விளக்கம்

டௌனர் சட்டம் - அமெரிக்க மைய அரசால் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனுக்காக, 1921 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு அமுலுக்கு வந்து 1929 ஆம் ஆண்டு அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்ட மிக முக்கியமான சட்டம். இந்தச் சட்டம் அமெரிக்கக் குழந்தைகள் நல வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றிய, செல்வாக்கு மிக்க சமூகப்பணியாளரான கிரேஸ் அப்போட் (1878-1939) தலைமையில் அமுல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் விளைவாக, அமெரிக்காவெங்கும் 3000 க்கும் அதிகமான மகப்பேறு விடுதிகள் மற்றும் குழந்தை நல மையங்கள், குறிப்பாக கிராமப் புறங்களில் தோற்றுவிக்கப்பட்டு சிசு மற்றும் பேறுகால இறப்பு விகிதங்களைப் பெருமளவில் குறைக்க உதவியது.
பார்க்க: Grace Abbott - அபோட், கிரேஸ் (1978-1939) - குழந்தைகள் நலனுக்கான பல சட்டங்கள் உருவாக்கக் காரணமாயிருந்த சமூகப் பணிக் கல்வியாளர். குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனுக்கு ஆலோசகராக இருந்தவர். வெள்ளை மாளிகையில் முதன்முதலில் குழந்தைகள் சம்பந்தமான மாநாடு நடத்தியவர்.

English

The federal child welfare and maternity health legislation (Maternity Act, ch. 135, 42 Stat. 224) enacted in 1921 and discontinued in 1929. Administered by the Children's Bureau under the leadership of social worker Grace Abbott (1878-1939), the act established almost 3,000 child and maternity health centers across the nation, mostly in rural areas. Despite great improvements in the nation's infant and maternal mortality rates, political pressure led to the act's abolition. See also WIC program.