shock
அதிர்ச்சி
தமிழ் விளக்கம்
அதிர்ச்சி அல்லது குருதிச் சுற்றோட்ட அதிர்ச்சி (Circulatory shock) என்பது குறைவான குருதிச் சுற்றோட்டத்தின் காரணத்தால், உயிரணுக்களின் அல்லது இழையங்களின் சுவாசத்துக்குத் (கலச்சுவாசம்) தேவையான பற்றுப்பொருள் போதியளவில் கிடைக்காமையால் ஏற்படும் உயிர்வாழ்வுக்கு அச்சமூட்டக்கூடிய மருத்துவ அவசர நிலைமைகளில் ஒன்றாகும். இதன் ஆரம்ப நிலையில் உடலுறுப்புக்களின் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் கலந்துள்ள குருதி போதியளவு கிடைப்பதில்லை. பலவீனமான நாடித் துடிப்பு, உடல் சில்லிடுதல், குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம், மூர்ச்சையாதல் அல்லது தலைசுற்றல் மற்றும் பலவீனமாக உணர்தல் இதன் அறிகுறிகளாகும். குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி என அழைக்கப்படும் அதிர்ச்சியை ஆச்சர்யம் மற்றும் அச்சவுணர்வினால் மனதோடு சம்பந்தப்பட்டு உணர்வெழுச்சியால் உண்டாகும் அதிர்ச்சியோடு தொடர்புபடுத்தக்கூடாது. உணர்வெழுச்சியால் உருவாகும் அதிர்ச்சி தற்காலிகமானது. இவை நேரிடையாக ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. குருதிச் சுற்றோட்ட அதிர்ச்சி உயிர்த் தீங்கு விளைவிக்கும் மருத்துவ அவசர நிலைமைகளுள் ஒன்றாகும். இருப்பினும் இவ்வதிர்ச்சி பல்வேறு விளைவுகளை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, குருதி உயிர்வளிக் குறைவு, இதய நிறுத்தம் என்பன அடங்கும்.
பொதுவான அதிர்ச்சியின் அறிகுறிகளாக தாழ் குருதியழுத்தம், உயர் இதயத்துடிப்பு, உடல் உறுப்புகளுக்கு போதியளவு குருதி கிடைக்காமையால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் (எ.கா: சிறுநீரகத்துக்கு குருதி வழங்கல் குறைவதால் குறைவான சிறுநீர் வெளியேற்றம்) போன்றவை உருவாகலாம். குருதியழுத்தத்தை மட்டும் வைத்து அதிர்ச்சியைக் கணிப்பிடலாகாது, ஏனெனில் குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உடையவருக்கு சிலவேளைகளில் குருதியழுத்தம் நிலையானதாகக் காணப்படலாம்.

English
1. A physical condition, often following a traumatic injury, in which the victim's blood circulation is impaired. Symptoms often include weak pulse, chills, nausea, irregular breathing, faintness, and weakness. 2. Sudden surprise, fright, and the feeling that one's bodily systems have temporarily come to a halt.