short-term long-term care (STLTC)
குறுகிய கால / நீண்ட காலப் பராமரிப்பு / கவனிப்பு
தமிழ் விளக்கம்
மருத்துவக் காப்பீட்டில் 90 நாட்களுக்குக் குறைவாக வழங்கப்படும் மருத்துவ உதவி அல்லது சிகிச்சை.
பார்க்க: long term care -நீண்டகாலப் பராமரிப்பு அல்லது வாழ்நாள் பராமரிப்பு - உண்ணல், உடுத்தல், குளித்தல், மலஜலம் கழித்தல், சமைத்தல், மருந்துன்னல், கடைகளுக்குச் செல்லல் போன்ற அன்றாடச் செயல்பாடுகளைக்கூட செய்ய இயலாத வலுக் குறைவானவர்களுக்கு நீண்ட காலம் தொடர்ந்து உதவ செய்யப்படும் ஏற்பாடுகள். வயதானவர்களுக்கு, வளர்ச்சி ரீதியான குறைபாடு உள்ளவர்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு, மன நோய் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாதிரியான நீண்ட காலப் பராமரிப்பு தேவைப்படும். இந்தப் பாராமரிப்பு குடும்ப உறுப்பினர்களாலோ, நிபுணர்களாலோ, தனியார் மற்றும் அரசு நலக்காப்பகங்களாலோ, தங்குமிடங்களிலோ, பகல் நேரப் பராமரிப்பகங்களாலோ, சமுதாயம் சார்ந்த நிறுவனங்களாலோ வழங்கப்படலாம். மருத்துவக் கண்காணிப்போடு, போக்குவரத்து மற்றும் நடமாட்ட / வழித்துணை உதவி, இல்லப் பராமரிப்பு, இரவுநேரக் கண்காணிப்பு, பொழுதுபோக்கு, வீட்டிற்கே சென்று உணவளித்தல், குறை தீர்ப்பு போன்ற உதவிகளும் நீண்டகாலப் பராமரிப்பில் அடங்கும் சேவைகளாகும்.

English
The health and social services program that provides long-term care (LTC) for fewer than 90 days.