Shyne, Ann Wentworth (1914-1995)

ஷைனீ ஆன் வெண்ட்வொர்த் (1914-1995)

தமிழ் விளக்கம்

ஷைனீ ஆன் வெண்ட்வொர்த் (1914-1995) - சமூகப்பணி ஆய்வின் முன்னோடி என்று கருதப்படுபவர். ஸ்மித் சமூகப்பணிக் கல்லூரியில் சமூகப்பணி முதுகலைப் பட்டமும், பிறந் மவர் கல்லூரியில் சமூகப்பணியில் முனைவர் பட்டமும் பெற்றவர். குடும்ப சேவைகளுக்கான அமெரிக்க நிறுவனத்திலும் (Family Service Association of America), அமெரிக்கக் குழந்தைகள் நல நிறுவனத்திலும் (Child Welfare Association of America) ஆய்வுப் பிரிவு இயக்குனராகப் பணியாற்றி பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, சமூகப்பணிக் கல்வியில் ஆய்வு முறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். சமூகப்பணி ஆய்வுக்குழு என்ற செல்வாக்குமிக்க அமைப்பு உருவாவதற்கு அடிகோலியவர்.

English

Leader in the development of social work research, she directed research projects for various organizations and helped found the influential Social Work Research Group. She led the group's effort to promote research in social work practice and in the curricula of schools of social work. She also authored many articles and books on research, foster care, and the development of brief treatment models.