sidetracking

விலகிச் செல்லல், திசை திரும்புதல், கவனச் சிதைவு

தமிழ் விளக்கம்

சமூகப்பணி பேட்டியின் போதோ, உதவி குறித்த உரையாடலின் போதோ, சமூகப்பணியாளரோ அல்லது வாடிக்கையாளரோ எதைப்பற்றி உரையாட வேண்டுமோ அதை உரையாடாமல் அதிலிருந்து விலகி வேறு விசயங்களைப் பற்றி உரையாடுவது. சம்பந்தமில்லாதவற்றைப் பற்றி அடிக்கடி உரையாடுவது, உதவி செய்யும் நடைமுறையைப் தாமதப்படுத்தும் அல்லது பாதிக்கும். ஒரு திறமையான சமூகப்பணியாளர், தேவையற்ற உரையாடல்களைத் தவிப்பதுடன், சொல்ல வேண்டிய செய்தியை விட்டு வேறொன்றைச் சொல்ல முயலும் வாடிக்கையாளரை நாசூக்காகத் தடுத்து விடுவார்.

English

In the social work interview, the client's or worker's intentional or unintentional shifts in focus of attention. Frequently getting away from the relevant subject impedes the helping process. The effective interviewer sometimes prevents this by intervening, reminding the client of the subject, and labeling the digression for what it is.