sigmoidoscopy

சிக்மோய்டோஸ்கோபி, மலக்குடல் உள்நோக்கி (மலக்குடல் பரிசோதனை)

தமிழ் விளக்கம்

மலக்குடல் என்பது பெருங்குடலின் கடைசிப் பகுதியும் (Sigmoid colon), மலக்குடலும் (Rectum) குதமும் (anal canal) இணைந்த பகுதி. இந்தப்பகுதியில் உள்ள நோய்களைக், குறிப்பாக புற்றுநோய் இருக்கின்றதா என்பதைக் கண்டறியப் பயன்படும் கருவியின் பெயர்தான் சிக்மோய்டோஸ்கோபி அல்லது மலக்குடல் உள்நோக்கி என்பது. இந்தக் கருவியின் மூலம் மலக்குடலில் நீர்ச்சதைகள் (புடைத்த திசுவின் சிறு துண்டுகள், polyps), இயல்பற்ற பகுதிகள் அல்லது புற்றுக்கட்டி ஆகியவை உள்ளனவா எனக் காண்பதற்காக மலக்குடல் மற்றும் சிக்மாய்டு (கீழ்ப்புற) முன்பெருங்குடலின் உட்புறத்தை பார்க்கமுடியும்.. சிக்மாய்டோஸ்கோப் மலக்குடல் வழியாக சிக்மாய்டு (கீழ்ப்புற) முன்பெருங்குடல் உள்ளே நுழைக்கப்படுகிறது. சிக்மாய்டோஸ்கோப் என்பது, ஒரு விளக்கு மற்றும் பார்வைக்கான ஒரு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மெல்லிய, குழல்-போன்ற உபகரணம். அதில், நீர்ச்சதைகள் அல்லது திசு மாதிரிகளை நீக்கியெடுப்பதற்கான ஒரு கருவியும் இருக்கலாம்; புற்றுநோய் அடையாளங்கள் உள்ளனவா என அறிவதற்காக இந்த மாதிரிகள் ஒரு நுண்ணோக்கி வழியாகச் சோதிக்கப்படும்.
Colonoscopy - கொலோனோஸ்கோபி பெருங்குடல் உள்நோக்கி - நீர்ச்சதைகள், இயல்பற்ற பகுதிகள், அல்லது புற்றுக்கட்டி ஆகியவை உள்ளனவா எனக் காண்பதற்காக மலக்குடல் மற்றும் முன்பெருங்குடலின் உட்புறத்தை நோக்குகிற ஒரு நடைமுறை. கொலோனோஸ்கோப் மலக்குடல் வழியாக முன்பெருங்குடலுக்குள் நுழைக்கப்படுகிறது.. கொலோனோஸ்கோப் என்பது, ஒரு விளக்கு மற்றும் பார்வைக்கான ஒரு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மெல்லிய, குழல்-போன்ற உபகரணம். கொலோனோஸ்கோபி. இயல்பற்ற பகுதிகள் உள்ளனவா எனக் காண்பதற்காக மலவாய் மற்றும் மலக்குடல் வழியாக முன்பெருங்குடலுக்குள் ஒரு மெல்லிய, விளக்கிட்ட குழல் நுழைக்கப்படுகிறது.அதில், நீர்ச்சதைகள் அல்லது திசு மாதிரிகளை நீக்கியெடுப்பதற்கான ஒரு கருவியும் இருக்கலாம்; புற்றுநோய் அடையாளங்கள் உள்ளனவா என அறிவதற்காக இந்த மாதிரிகள் ஒரு நுண்ணோக்கி வழியாகச் சோதிக்கப்படும்.

English

A medical procedure, using a sigmoidoscope, to inspect the rectum and sigmoid colon. This is the most common procedure to screen for colon cancer and other abnormalities (such as polyps) of the large intestine. The American Cancer Society, the National Cancer Institute, and the American College of Surgeons recommends that asymptomatic individuals have a sigmoidoscopic examination every three to five years in conjunction with an annual fecal occult blood test, beginning at age 50. This screening of individuals with family history of colorectal cancer should begin at least by age 40 and should be repeated every five years.